கோலியும் இல்லை ரோஹித்தும் இல்லை! தோனி போல் செயல்படும் இந்திய கேப்டன் இவர்தான்! புகழ்பாடும் பாக் முன்னாள் வீரர்! 1

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது. ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியை வழி நடத்துவது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஒருநாள் தொடர் நடந்து முடிந்தவுடன் தற்பொழுது டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடுவதாகவும் அவரது தலைமைப் பண்பு சற்று மனித சிந்தனை போல உள்ளது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரன் அக்மல் தற்போது கூறியிருக்கிறார்.

கோலியும் இல்லை ரோஹித்தும் இல்லை! தோனி போல் செயல்படும் இந்திய கேப்டன் இவர்தான்! புகழ்பாடும் பாக் முன்னாள் வீரர்! 2

அவரிடம் நல்ல நிதானம் மற்றும் பொறுமை இருக்கிறது

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் ஷிகர் தவான் எல்லா போட்டிகளிலும் மிக பொறுமையாக இருக்கிறார். நெருக்கடியான நேரத்தில் சற்று நிதானமாக யோசித்து மணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார். குறிப்பாக முதல் டி20 போட்டியில் இலங்கை அணி முதல் இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது. எந்த விக்கெட்டையும் இலங்கை அணி அந்த நிலையில் கைவிடவில்லை.

இருப்பினும் பொறுமையாகவும் நிதானமாகவும் ஷிகர் தவான் செயல்பட்ட காரணத்தினால் இறுதியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதுபோல நிறைய போட்டிகளில் நாம் செய்து பார்த்திருப்போம். தற்பொழுது அவரைப்போலவே இவரும் மிக சிறப்பான அணியை வழிநடத்துவது நம்பிக்கையை அளிக்கிறது என்று கம்ரன் அக்மல் கூறியுள்ளார்.

கோலியும் இல்லை ரோஹித்தும் இல்லை! தோனி போல் செயல்படும் இந்திய கேப்டன் இவர்தான்! புகழ்பாடும் பாக் முன்னாள் வீரர்! 3

புவனேஸ்வர் குமார் மிக சிறப்பாக செயல்பட்டார்

புவனேஸ்வர் குமார் மிக சிறப்பாக முதல் டி20 போட்டியில் பந்து வீசியது இந்திய அணியின் நம்பிக்கையை சற்று அதிகப்படுத்தி உள்ளது. 3.3 ஓவர்கள் வீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக பெர்னாண்டோ விக்கெட்டை கைப்பற்றி அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தார். இதே பெர்ஃபாமன்ஸ்ஸை உலக கோப்பை டி20 தொடரிலும் புவனேஸ்வர் குமார் நிச்சயமாக வெளிப்படுத்துவார் என்று கம்ரன் அக்மல் இறுதியாக கூறி முடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *