"எனக்கு வார்னேவை சுத்தமாக பிடிக்காது, கும்ளே, அப்ரிடி தான் பிடிக்கும்" ரஷீத் கான் பேச்சு 1

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் தான் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் நான் சிறுவயதாக இருக்கையில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் இந்திய அணியின் அனில் கும்ளே மற்றும் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் அப்ரிடி எனவும் கூறினார். மேலும், எனக்கு ஆஸ்திரல்லை அணியின் ஷேன் வார்னே பெரிதாக பிடிக்காது எனவும் கூறினார்.

"எனக்கு வார்னேவை சுத்தமாக பிடிக்காது, கும்ளே, அப்ரிடி தான் பிடிக்கும்" ரஷீத் கான் பேச்சு 2

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் கிரிக்கெட் உலகில் மிகவும் பாராட்டப்பட்டும் வருகிறார். ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை க்கு தகுதி பெறுவதற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதன் பின்பு பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செய்யப்பட்டு தொடர் நாயகன் விருதும் பெற்றார்.

ஐபில் போட்டிகளில் சன் ரைசெஸ் அணிக்காக பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்து, சீசன் முடிவில் சன் ரைசெஸ் அணிக்காக 21 முடிவில் விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட்டிங்கிலும் முக்கிய பங்கு ஆற்றினார். ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்ல இந்தியாவிலும் ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு உண்டு.

"எனக்கு வார்னேவை சுத்தமாக பிடிக்காது, கும்ளே, அப்ரிடி தான் பிடிக்கும்" ரஷீத் கான் பேச்சு 3

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை பெங்களுருவில் ஆடியது. அந்த போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இரண்டே நாளில் வெற்றி பெற்றது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதில், ரஷீத் கான் 100 ரன்களுக்கும் மேல் விட்டுகொடுத்தாலும், பின்பு மெல்ல மெல்ல திரும்ப வந்து சிறப்பாக பந்துவீசினார். முடிவில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார். என்னதான் ரன்களை முதலில் விட்டுகொடுத்தாலும், திரும்ப வந்து மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். ரசிகர்களின் நம்பிக்கையையும் வீணடிக்கவில்லை.

மேலும், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், எனக்கு சிறுவயதில் இருந்தே அப்ரிடி மற்றும் கும்ளே இருவரையும் மிகவும் பிடிக்கும். ஏனெனில், இருவரும் சுழற்பந்துவீச்சில் விரைவாக வீசி விக்கெட் எடுப்பர். அந்த வேகம் தான் என்னுடைய பலமும், குணமும் கூட. வார்னே என்னை மிகவும் ஈர்த்ததில்லை, அவர் மிகவும் மெதுவாக வீசி பந்தை சூழலில் விக்கெட் வீழ்த்துபவர். எனக்கும் வேகம் தான் பிடிக்கும் என கூறினார்.

"எனக்கு வார்னேவை சுத்தமாக பிடிக்காது, கும்ளே, அப்ரிடி தான் பிடிக்கும்" ரஷீத் கான் பேச்சு 4

 

எனது குடும்பம் தான் எனது பலம், இப்போதும் அவர்களுடன் கலாட்டா செய்துகொண்டே தான் இருப்பேன். என் குடும்பத்தில் இருக்கும் ஐந்து ஆறு வயது சிறுவர்கள் கூட சுழற்பந்து வீசுவர். அந்த வயதில் இருந்தே முயற்சி செய்ததால் எனக்கு தற்போது உதவியாக இருக்கிறது என கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *