இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், தனது டி20 ஆட்டங்கள் பற்றி தனக்கு கவலை இல்லை என அசால்ட்டாக கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு கடந்த ஐந்து வருடங்களாக டி20 போட்டிகளை ஆடிவரும் ஜோ ரூட், இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்டோலில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் முதன் முறையாக வெளியில் அமர்த்தப்பட்டார்.
முதல் இரண்டு போட்டிகளை ஆடிய ஜோ ரூட் பெரிய ஸ்கோர்கள் ஏதும் எடுக்கவில்லை. காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் முதல் இரண்டு போட்டிகள் ஆடவில்லை. மூன்றாவது போட்டியில் ஜோ ரூட் க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஜோ ரூட் வெளியில் அமர்த்தப்பட்டார். அந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று தான் போனது. மேலும், 1-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.

இங்கிலாந்துக்கு ஆடுவது தான் எனக்கு முக்கியம்
இந்நிலையில், போட்டி துவங்கும் முன்பு ஜோ ரூட், தனது மனநிலை தெளிவாக உள்ளது. டி20 போட்டிக்கான வாழ்க்கை முடிந்துவிடவில்லை ஆனால் இங்கிலாந்து அணிக்கு ஆடுவது தான் முக்கியம் என்றவாறு கூறினார்.

மேலும், டி20 போட்டியை பொறுத்தவரை தான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இருப்பதாகவும் கூறினார். தான் வெளியில் அமர்த்தப்பட்டது என்னுடைய அனுமதியில் தான் எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.