நாட்டுக்காக விளையாடுவதை விட காசுக்காக விளையாடுறது தான் முக்கியமா..? ஆஸ்திரேலியா வீரரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் !! 1
நாட்டுக்காக விளையாடுவதை விட காசுக்காக விளையாடுறது தான் முக்கியமா..? ஆஸ்திரேலியா வீரரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ஆஸ்திரேலியா அணியில் பயிற்சியை மேற்கொள்ளாமல், ஹசல்வுட் இந்தியாவில் ஐபிஎல் விளையாடுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது, இதற்கான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு அணிகளும் செய்து வந்தாலும் இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணி ஒரு படி மேலே சென்று உலக டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியை சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது.

நாட்டுக்காக விளையாடுவதை விட காசுக்காக விளையாடுறது தான் முக்கியமா..? ஆஸ்திரேலியா வீரரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் !! 2

ஐபிஎல்லா… டெஸ்ட் போட்டியா…

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருக்கும் டேவிட் வார்னர், மிச்சல் மார்ஷ் கேமரூன் கிரீன் மற்றும் ஹசல்வுட் ஆகிய நான்கு வீரர்கள், ஆஸ்திரேலியாவில் பயிற்சியை மேற்கொள்ளாமல் இந்தியாவில் ஐபிஎல் தொடர் விளையாடி வருவது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுக்காக விளையாடுவதை விட காசுக்காக விளையாடுறது தான் முக்கியமா..? ஆஸ்திரேலியா வீரரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் !! 3

குறிப்பாக நீண்ட காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு பல போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட்., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டிக்கு தயாராகாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பெங்களூர் அணிக்கு திரும்பியுள்ளது முன்னாள் வீரர்கள் மத்தியில் விவாத பொருளாகியுள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்., ஹசல்வுட்டின் இந்த முடிவு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டிக்கு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக விளையாடுவதை விட காசுக்காக விளையாடுறது தான் முக்கியமா..? ஆஸ்திரேலியா வீரரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் !! 4

இதுகுறித்து கிளார்க் தெரிவித்ததாவது, “அவர் ஆஸ்திரேலியா அணியில் பயிற்சியை மேற்கொள்ளாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அதிகமான வீரர்கள் உள்ளனர்.ஆனால் முக்கியமான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்வதற்கு நெட்சில் பயிற்சி செய்ய இங்கு உங்களைப் போன்ற வீரர்கள் தேவை”.

நாட்டுக்காக விளையாடுவதை விட காசுக்காக விளையாடுறது தான் முக்கியமா..? ஆஸ்திரேலியா வீரரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் !! 5

ஹசல்வுட் ஐபிஎல் தொடரில் 3 அல்லது 4 ஓவர்கள் வீசுவார், ஆனால் அது எப்படி ஆஷஸ் தொடர் போன்ற முக்கியமான போட்டிகளில் உதவி செய்யும் என தெரியவில்லை, காயம் காரணமாக நீண்ட காலத்திற்குப் பிறகு தற்பொழுது விளையாட ஆரம்பித்திருக்கும் ஹசல்வுட் டெஸ்ட் தொடருக்கு பயிற்சியை மேற்கொள்ளாமல் இந்தியாவில் இருப்பது விளையாட்டுத்தனமாக உள்ளது ”என மைக்கேல் கிளார்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *