இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் அவ்வளவாக டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது அவரது உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக முடிந்தவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
அவர் தற்பொழுது இந்திய இளம் வீரர் ரிஷபன் குறித்து பெருமைப்படும் வகையில் பேசியுள்ளது அனைத்து சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்படுகிறது.
ரிஷப் பண்ட் விளையாடினால் அந்த போட்டியை நான் நிச்சயமாக பார்ப்பேன்
தற்பொழுது பேசியுள்ள அவர் தான் டெஸ்ட் போட்டிகளை அவ்வளவு பெரிதாக விரும்புவதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் சமீப காலத்தில் ரிஷப் பண்ட் விளையாடினால் மட்டும் அது டெஸ்ட் போட்டி என்றாலும் கூட விரும்பிப் பார்த்து வருவதாக கூறி இருக்கிறார்.

தனக்கு எப்பொழுதும் பொழுதுபோக்கு நிறைந்த கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிடிக்கும் என்றும், எதிர்பாராத விதமாக ஆட்டத்தில் ஏற்படும் திருப்புமுனைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். தன் முன் கூறிய அனைத்து விஷயங்களையும் ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக சமீப காலங்களாக செய்து வருகிறார்.
பல நேரத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து விடும் என்று நினைக்கும் வேளையில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். மேலும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் என்று மில்ஸ் கூறியுள்ளார். அவர் தனக்கு மிகவும் பிடித்த போட்டியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய கடைசி போட்டியை குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அசத்தி வரும் ரிஷப் பண்ட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக ரிஷப் பண்ட் விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மொத்தமாக 515 ரன்களை குவித்து இருக்கிறார். அவரது ஆவரேஜ் 64.38, மேலும் அதில் 4 அரைசதங்கள் அவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நிச்சயமாக அவர் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.