எந்த சந்தேகமும் இல்ல... டி.20 உலகக்கோப்பையில் இவருக்கு இடம் உறுதி; வாசிம் ஜாபர் உறுதி !! 1

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் புவனேஷ் குமாரை நிச்சயம் இந்திய அணியில் இணைக்க வேண்டும் என்று வாசிம் ஜாஃபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் பங்கேற்று தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்த புவனேஸ்வர் குமார் கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.

எந்த சந்தேகமும் இல்ல... டி.20 உலகக்கோப்பையில் இவருக்கு இடம் உறுதி; வாசிம் ஜாபர் உறுதி !! 2

‘ஸ்விங் கிங்’ என்று பாராட்டப்பட்ட புவனேஸ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்ய முடியாமலும் வேகமாக பந்து வீச முடியாமலும் திணறி வந்தார். இதன் காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் விமர்சகற்களும் இவரை கடுமையாக விமர்சித்தனர்.

ஒழுங்காக விளையாட முடியவில்லை என்றால் கௌரவமாக நீங்களே விலகி விடுங்கள் என்று கூறும் அளவிற்கு விமர்சனம் மிகவும் கடுமையாக இருந்தது.

இந்த நிலையில் தன்னை விமர்சித்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் வகையில் புவனேஸ்வர் குமார் மீண்டும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இவருடைய பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

சமீபகாலமாகவே t20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரின் விக்கெட்டை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வீழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

எந்த சந்தேகமும் இல்ல... டி.20 உலகக்கோப்பையில் இவருக்கு இடம் உறுதி; வாசிம் ஜாபர் உறுதி !! 3

இந்த நிலையில் அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புவனேஸ்வர் குமாரை நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாஃபர் எதிர்வரும் உலக கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எந்த சந்தேகமும் இல்ல... டி.20 உலகக்கோப்பையில் இவருக்கு இடம் உறுதி; வாசிம் ஜாபர் உறுதி !! 4

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் தெரிவித்ததாவது, “சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை ஸ்விங் செய்ய தெரிந்த பந்துவீச்சாளர்கள் தான் பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவாக இருப்பார்கள், வேகப் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் பந்தை ஸ்விங் செய்யும் திறமை படைத்தவர்கள் அந்த அளவிற்கு கிடையாது,ஆனால் புவனேஸ்வர் குமார் அதில் கைதேர்ந்தவர், அவர் இந்திய அணியில் விளையாடும் போது சரியானதை செய்துள்ளார். குறிப்பாக பலம் வாய்ந்த பேட்டிங் லைன்-அப் கொண்ட அணிகளுக்கு எதிராக இவருடைய பந்திவீச்சு அருமையாக இருக்கிறது, நிச்சயம் இவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் இடம்பெறப் போவது உறுதி, அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்,மேலும் புவனேஸ்வர் குமார் அதற்கு மிக தகுதியானவர் என்றும் வாசிம் ஜாபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *