ரோகித் சர்மா பாவம், இந்தியா தோத்தா அவர் என்ன பண்ணுவாரு; தப்பெல்லாம் இது மட்டுமே - ஜடேஜா பேட்டி! 1

முதல் போட்டியில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் இந்தியா இதை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் அஜய் ஜடேஜா.

நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208 ரன்கள் அடித்தது. பேட்டிங்கில் கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அபாரமாக விளையாடினர். பேட்டிங்கில் ஒருவரையும் குறைகூற இயலாது. அதேபோல் பந்து வீச்சில் இந்திய அணி ஒரு கட்டத்தில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உமேஷ் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை உயர்ப்புடன் வைத்திருந்தார். ஆனால் கடைசிகட்ட ஓவர்களை வீசிய பந்துவீச்சாளர்கள் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியா சார்பில் சென்றது. இறுதியில் மேத்தீயு வேட் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்.

ரோகித் சர்மா பாவம், இந்தியா தோத்தா அவர் என்ன பண்ணுவாரு; தப்பெல்லாம் இது மட்டுமே - ஜடேஜா பேட்டி! 2

இரு அணி பந்துவீச்சாளர்களும் அதிகரன்களை விட்டுக் கொடுத்தனர். ஏனெனில் மைதானம் அதிக ரன்களை அடிப்பதற்கு மிக சாதகமாக இருந்தது. சிலர் இந்திய அணியின் பந்துவீச்சை குறை கூறி வருகிறார்கள். ஆனால் இந்திய அணியின் இந்த தோல்விக்கு யாரையும் குறைகூற இயலாது என்று பேசி இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா. இவர் கூறுகையில்,

“இந்திய அணி சரியான திட்டத்துடன் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய போது திட்டம் சிறப்பாக சென்றது. ஆனால் இறுதிவரை அந்த திட்டம் வேலை செய்யவில்லை. யாரை இந்த போட்டியில் குறை சொல்ல முடியும்? தோல்விக்கு யார் காரணம்? என்று தேர்வு கூறவே முடியாது.

ஒரு கட்டத்தில் அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டது சரி இல்லை என எண்ணினேன். ஆனால் எனது கணிப்பு தவறானது. அவர்தான் இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசினார். அவர் முற்றிலுமாக வேறு ஏதோ மைதானத்தில் பந்து வீசுவது போல தெரிந்தது. சஹல் மிகவும் மோசமாக பந்து வீசினார் என்று நான் கூற மாட்டேன். ஏனெனில் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது. ரோகித் சர்மா குழப்பத்தில் இருப்பதை நான் உணர்கிறேன். இறுதியில் ஆஸ்திரேலியா அணியின் பக்கம் ஆட்டம் சென்றது.” என்றார்.

ரோகித் சர்மா பாவம், இந்தியா தோத்தா அவர் என்ன பண்ணுவாரு; தப்பெல்லாம் இது மட்டுமே - ஜடேஜா பேட்டி! 3

“முதல் போட்டியில் என்னை பொறுத்தவரை, தவறு என்னவென்றால், எந்த வீரருக்கு எந்த வரிசையில் ஓவர்கள் கொடுக்க வேண்டும் என்பதை அவ்வபோது மாற்றிக் கொண்டே இருந்தது தான் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மாவால் வேறு என்ன செய்ய முடியும்? ஓவர் வீசும் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை கொடுத்தால் கேப்டன் குழப்பம் அடையத்தான் செய்வார். ரோகித் சர்மா மிகவும் பாவம்.” என்றும் அவர் பேசினார்.

Leave a comment

Your email address will not be published.