விராட் கோலி விளையாட தொடங்கி அதன் பின்னர் 8 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம் வீரர் விளையாடத் தொடங்கினார். அவரது பெயர் பாபர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மிக சிறப்பாக விளையாடி வரும் அவரை இந்திய வீரர் விராட் கோலியுடன் இணைத்து பலரும் பேசி வருவது வழக்கம். ஒரு சிலர் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்றும் ஆனால் ஒரு சிலர் பாபர் அசாம் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறி நாம் நிறைய கேட்டிருப்போம்.
ஆனால் தற்பொழுது பாபர் அசாம் தன்னைவிட விராட் கோலி தான் சிறந்த வீரர் என்று வெளிப்படையாக மனம் திறந்துள்ளார்.
அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவதில் எனக்கு பெருமை
இது குறித்து பேசியுள்ள அவர், அவரது அனுபவம் முற்றிலும் மாறுபட்டது நிறைய ஆண்டுகள் அவர் சர்வதேச அளவில் விளையாடி இருக்கிறார். எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கே அவர் தனது தனித்திறமையை காண்பித்து அவரது அணியை வெற்றி பெறச் செய்து வருகிறார். எனவே என்னை அவருடன் ஒப்பிடுவது மிகவும் தவறு என்று கூறியுள்ளார்.
இருப்பினும் எனக்கு உள்ளுக்குள் அவரை ஒப்பிட்டு பேசுவதில் பெருமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் அவருடைய பிளையிங் ஸ்டைலில் விளையாடுகிறார் நான் என்னுடைய பிளையிங் ஸ்டைலில் விளையாடுகிறேன். எங்கள் இருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. எனவே மீண்டும் மீண்டும் அவருடன் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவரைப்போலவே நானும் பாக்கித்தான் அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுத் தருவேன்
என்னைப் பொறுத்தவரையில் அவர் எப்படி தனது அணிக்காக மிக சிறப்பாக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார் அதேபோல் இனி வரும் ஆண்டுகளில் எனது அணைக்காக நான் விளையாட ஆசைப்படுகிறேன். நன்றாக விளையாடி நிறைய வெற்றிகளை எனது பாகிஸ்தான் அணிக்காக பெற்றுத்தர நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம்
ஒருநாள் தரவரிசை பட்டியல் முதலிடத்தில் பாபர் அசாம் மற்றும் இரண்டாவது இடத்தில் விராட் கோலி உள்ளனர். டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 5வது இடத்தில் விராட் கோலியும் 10வது இடத்தில் பாபர் அசாமும் உள்ளனர். டி20 தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாபர் அசாம் மற்றும் 5வது இடத்தில் விராட் கோலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.