இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குறித்து இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர் அஸ்வின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பொழுது இந்திய அணியின் ரெகுலர் வீரராக திகழ்ந்து வந்த குல்தீப் யாதவ் தோனியின் ஓய்வுக்குப்பின் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இருந்த போதும் அவருக்கு அவ்வப்போது வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வந்தது ஆனால் அதை குல்தீப் யாதவ் சரியாக பயன்படுத்தவில்லை இதன் காரணமாக அவர் முற்றிலும் இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்கவில்லை என்பதால் மிகவும் மனமுடைந்து தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கிரிக்கெட் சம்பந்தமான கருத்துக்களை ஆக்டிவாக பேசி வரும் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தெரிவித்து இருந்தார்.
2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதன் முறையாக ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் 2-1 என வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. குறிப்பாக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் அஸ்வின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, “நான் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன் அவரிடம் போட்டி சம்பந்தமாக அதிகமாக பேசுவேன், அப்பொழுது அந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார், என்னால் அந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, இருந்தாலும் நான் சிறப்பாகவே அந்த தொடரில் விளையாடினேன், அப்பொழுது ரவிசாஸ்திரி இந்தியாவின் தலைசிறந்த நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளர் என்றால் அது குல்திப் யாதவ் தான் என்று தொடர் முடிந்தவுடன். தெரிவித்தார் அப்பொழுது நான் மிகவும் உடைந்து விட்டேன், இருந்தாலும் குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து நான் மகிழ்ச்சிதான் அடைந்தேன்.

சக வீரரின் முன்னேற்றத்தை கண்டு நான் சந்தோஷப்பட்டேன் ஆனால் என்னால் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது, ஆனால் அதையெல்லாம் மனதில் வைக்காமல் தொடரை வென்ற சந்தோஷத்தில் பார்ட்டியில் ஜாலியாக இர்ந்தோம், இருந்தபோதும் ரவிசாஸ்திரி கூறிய அந்த வார்த்தை என்னை தூக்கி எறியப்பட்டு விட்டோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது இதனால் இது சம்பந்தமாக என் மனைவியிடம் தெரிவித்து அந்த மனநிலையில் இருந்து மீண்டு மறுபடியும் சந்தோசமாக மாறிவிட்டேன் என்று அஸ்வின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.