ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக விளையாட ஆசைப்படுகிறேன்; குறிவைக்கும் கிளன் மேக்ஸ்வெல் !! 1


ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்,இவர் அதிரடியாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை, இவர் 11 போட்டியில் பங்கெடுத்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தார் மேலும் 3 விக்கெட்களை வீழ்த்தினார் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 101.89 மற்றும் ஆவரேஜ் 15.43 மிகவும் மோசமாக செயல்பட்ட கிளன் மேக்ஸ்வெலை பஞ்சாப் அணி தனது அணியிலிருந்து விடுவித்தது.

இவரின் மோசமான செயல்பட்டால் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் விமர்சித்தனர் குறிப்பாக சேவாக் இவர் இந்தியாவுக்கு குளிர்பானங்கள் குடிப்பதை மட்டுமே வருகிறார் விளையாட வரவில்லை என்று கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனத்திற்கு பலர் தனது ஆதரவுகளையும் எதிர்ப்புகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக விளையாட ஆசைப்படுகிறேன்; குறிவைக்கும் கிளன் மேக்ஸ்வெல் !! 2

10.75 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இந்த விமர்சனத்திற்கு பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



அதற்கு பின் ஐபிஎல் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டியில் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 167 ரன்கள் அடித்தார்,இவருடைய அவரேஜ் 83.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 194.19.பின் டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 36 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அசத்தினார். இவரின் இந்த அபாரமான திறமையால் 2021 கானா ஐபிஎல் போட்டியில் இவரை ஏலத்தில் எடுப்பதற்கு அனைத்து அணிகளின் போட்டி போட்டு கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக விளையாட ஆசைப்படுகிறேன்; குறிவைக்கும் கிளன் மேக்ஸ்வெல் !! 3


இந்நிலையில் இதுபற்றி மேக்ஸ்வெல் தெரிவித்ததாவது, எனக்கு ஆர்சிபி அணியில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது, குறிப்பாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் மேலும் அவருடைய பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார், மேலும் அவருடன் சேர்ந்து விளையாடுவது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் மேலும் என் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு அது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.எனவே வரும் ஆண்டுகளில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *