இதுவரை நீங்க பாத்தது டிரைலர் தான்.. டெஸ்ட்ல தான்டா நான் ஸ்பேசலிஸ்ட் - டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு பற்றி பேசிய சூரியகுமார் யாதவ்! 1

நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கியது டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் சூரியகுமார் யாதவ்.

மைதானத்தில் அனைத்து பக்கங்களிலும் பந்தை தெரிக்கவிடுபவர் என்பதால், மிஸ்டர் 360 டிகிரி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் சூரியகுமார் யாதவ், ஐபிஎல் போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் வாயிலாக தனது அதிரடியை வெளிப்படுத்தி இந்திய அணியின் டி20 போட்டிகளில் இடம்பிடித்து தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

குறிப்பாக இந்த 2022 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு கனவு ஆண்டாக டி20 போட்டிகளில் அமைந்திருக்கிறது. 1000 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். ஓர் ஆண்டில் டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

2022ம் ஆண்டு இரண்டு டி20 சதங்களும் அடித்திருக்கிறார் சூரியகுமார் யாதவ். டி20 உலக கோப்பையிலும் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தார். சமீபகாலமாக இவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

சூரியகுமார் யாதவ் ரவி சாஸ்திரி

சூரியகுமார் யாதவ் போன்ற வீரருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தால் அதை மிகச் சிறப்பாக பயன்படுத்தி அதிரடியாக விளையாடுவார். சமகால டெஸ்ட் போட்டிகளில் இவரை போன்ற வீரருக்கு தான் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று டி20 உலககோப்பையின்போது ரவி சாஸ்திரி குறிப்பிட்டார்.

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் தனது சமீபத்திய பேட்டியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்தும், இடம் கிடைத்தால் எப்படி உணர்வேன் என்பது பற்றியும் பேட்டி அளித்துள்ளார். அவர் பேசியதாவது:

சூரியகுமார் யாதவ்

“நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை சிவப்பு பந்தில் தான் துவங்கினேன். வயது வாரியாக விளையாடிய காலங்களில் தொடர்ச்சியாக சிவப்பு பந்தில் நீண்ட காலம் விளையாடி, அதில் அங்கீகாரம் கிடைத்த பிறகு தான் வெள்ளை பந்து போட்டிகளில் விளையாட துவங்கினேன்.

மும்பை அணிக்காக நீண்ட காலம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்திருக்கிறேன். ஆகையால் டெஸ்ட் போட்டி என்பது எனக்கு ஒன்றும் புதிது அல்ல. நான் டெஸ்ட் போட்டியில் விளையாட துவங்கிய காலத்தில் இருந்தே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற பேரார்வம் கொண்டுள்ளேன். என்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக வெள்ளை பந்துகளில் அதிரடியாக விளையாட ஆரம்பித்து, தற்போது எனக்கு அதில் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் என்னை நான் நிரூபித்து காட்டுவேன். எனது நீண்ட கால கனவு அதுதான்.” என்று மனம் திறந்து பேசினார் சூரியகுமார் யாதவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *