கங்குலி சிறந்த பேட்ஸ்மேன் ஆவதற்கு நான் செய்த சின்ன விஷயம் தான் காரணம் - ஆணித்தனமாக சொல்லும் முன்னாள் பயிற்சியாளர்! 1

கங்குலி சிறந்த பேட்ஸ்மேன் ஆவதற்கு நான் செய்த சின்ன விஷயம் தான் காரணம் – ஆணித்தனமாக சொல்லும் முன்னாள் பயிற்சியாளர்! 

கங்குலி நல்ல பேட்ஸ்மேனாக உருவாவதற்கு நான் கொடுத்த யோசனை தான் காரணம் என முன்னாள் பயிற்சியாளர் மதன் லால் கூறியுள்ளார்.

1992ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான கங்குலி, தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் 1996ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். 2000ஆம் ஆண்டு சச்சின் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது, அணியில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி பேட்டிங்கில் கவனம் செலுத்த துவங்கினார்.

கங்குலி சிறந்த பேட்ஸ்மேன் ஆவதற்கு நான் செய்த சின்ன விஷயம் தான் காரணம் - ஆணித்தனமாக சொல்லும் முன்னாள் பயிற்சியாளர்! 2

அச்சமயம், கேப்டன் பொறுப்பு கங்குலியிடம் கொடுக்கப்பட்டது. இவரது தலைமையில் 2003 உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது.

கங்குலி கேப்டன் பொறுப்பில் பல சாதனைகள் படைத்தது மட்டுமல்லாது, பல இளம் வீரர்களையும் உருவாக்கியுள்ளார். இவரது கேப்டன் பொறுப்பில் இருந்த 7 வீர்ரகள் 2011 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்தனர்.

கங்குலி சிறந்த பேட்ஸ்மேன் ஆவதற்கு நான் செய்த சின்ன விஷயம் தான் காரணம் - ஆணித்தனமாக சொல்லும் முன்னாள் பயிற்சியாளர்! 3

கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் 7212 ரன்கள் அடித்துள்ளார். அதில் 16 சதங்களும் 35 அரைசதங்களும் அடித்துள்ளார். 311 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கங்குலி 11363 ரன்கள் அடித்துள்ளார் கங்குலி. அதில் 22 சதங்களும் 72 அரைசதங்களும் அடங்கும்.

துவக்கத்தில் கங்குலி 6வது வீரராக களமிறங்கி வந்தார். துவக்க வீரராக மாறிய பிறகே அவரால் பேட்டிங்கில் இத்தனை சாதனைகள் படைக்க முடிந்தது. இந்நிலையில், துவக்க வீரராக களமிறங்க யோசனை கூறியது நான் தான் என கூறியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் மதன் லால்.

கங்குலி சிறந்த பேட்ஸ்மேன் ஆவதற்கு நான் செய்த சின்ன விஷயம் தான் காரணம் - ஆணித்தனமாக சொல்லும் முன்னாள் பயிற்சியாளர்! 4

அவர் கூறியதாவது: “கங்குலி நன்கு பேட்டிங் செய்ய கூடியவர் என எனக்கு தெரியும். அவரது திறமைகளை முழுவதுமாகப் பயன்படுத்த விரும்பினோம். 5-ம் நிலை வீரராக விளையாடினால் ஒன்றும் நடக்காது. நீங்கள் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என அவரிடம் கூறினேன். சில ஓவர்கள் பேட்டிங் நிதானமாக ஆடிவிட்டு அதிரடி ஆட்டத்தைத் தொடங்க சரியாக இருக்கும் என எண்ணினேன். அவரும் சரி என்றார். அதன்பிறகு அவர் பின்வாங்கவேயில்லை. சச்சினும் கங்குலியும் இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளைத் தேடித் தந்தார்கள். நான் அப்போது பயிற்சியாளராக இருந்தேன். இலங்கைத் தொடரில் இந்த ஆலோசனையைக் கூறினேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *