இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், சீனியர் வீரரான ஹர்திக் பாண்டியாவுடன் தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரக வலம் வந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக பந்து வீச முடியாமல் சில ஆண்டுகள் அவதிப்பட்டு வந்தார், இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியிலிருந்து தற்காலிகமாக ஓரம் கட்டப்பட்டுள்ளார். எப்பொழுது ஹர்திக் பாண்டியாவால், பந்து வீச முடியும் என்பது உறுதியாகிறதோ அப்பொழுதுதான் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தேர்வாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

அந்த சமயத்தில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரானா ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இந்திய அணிக்கு தேவைப்பட்டது,அப்போது வெங்கடேஷ் ஐயர் 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனது இடத்தை உருதிசெய்தார்.
மேலும் இந்திய அணிக்காக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
அதில் ஒரு சிலர் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை சீனியர் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிட்டு கருத்துகளை தெரியப்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் என்னையும் சீனியர் வீரர் ஹார்திக் பாண்டியாவையும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று இந்திய அணியில் ஆல் ரவுண்டர் வெங்கடேச ஐயர் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கடேச ஐயர் பேசுகையில்,“ ஒரு கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு செய்ததை வைத்து அவர் மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன், ஹர்திக் பாண்டியா நம்ப முடியாத பல சாதனைகளை செய்துள்ளார். அவரைப் பார்த்து நான் அசந்து போயிருக்கிறேன், சிலர் என்னையும் அவரையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், இது வழக்கமானது தான். ஆனால் நான் விளையாடுவதற்காக வந்துள்ளேன், என்னையும் சீனியர் வீரர் ஹர்திக் பாண்டியாவையும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் என வெங்கடேச ஐயர் அதில் தெரியப்படுத்திருந்தார்.