எல்லாம் பொய் அபாண்டமான பொய்.. கொதித்தெழுந்தத டி வில்லியர்ஸ் !! 1

எல்லாம் பொய் அபாண்டமான பொய்.. கொதித்தெழுந்தத டி வில்லியர்ஸ்

தென் ஆப்ரிக்கா அணியில் மீண்டும் விளையாட அனுமதி கேட்டதாக வெளியான தகவலை டி.வில்லியர்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மே 2018-ல் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தார். ஓய்வு அறிவித்த அன்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நெருங்கிய நபர் ஒருவர்  ‘உலகக்கோப்பையில் விளையாட கதவுகள் திறந்தேயிருக்கின்றன’ என்று தன்னிடம் அந்தரங்கமாகக் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே தான் உலகக்கோப்பையில் ஆட முடியுமா என்று டுபிளெசிஸிடம் கேட்டதாகவும் ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

தன்னிடம் கேட்ட அந்த நபரின் பெயரைக் குறிப்பிட விரும்பாத டிவில்லியர்ஸ் அவர்தான் டுப்ளெசிசிடம் சாதாரணமாக இது குறித்து கேட்குமாறும் தன்னிடம் கூறியதாகவும் டிவில்லியர்ஸ் இப்போது தெரிவித்துள்ளார்.

எல்லாம் பொய் அபாண்டமான பொய்.. கொதித்தெழுந்தத டி வில்லியர்ஸ் !! 2

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் டிவில்லியர்ஸ் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

நான் ஓய்வு அறிவித்த தினத்தன்று என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்கப்பட்டது, உலகக்கோப்பைக்கு வரும் எண்ணமுள்ளதா என்று. நான் உடனேயே ஆமாம் என்றேன், ஆனால் இப்போது தோன்றுகிறது, நான் அப்போதே வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும் என்று. ஆனால் என்னுடைய இயல்பான மனநிலை எதையும் யார் கேட்டாலும் மறுக்காது, உடனடியாக ஏற்றுக் கொள்வது என்பதால் ஆம் என்று கூறிவிட்டேன்.

ஆனால் அதன் பிறகு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கும் அணிக்கும் எனக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை. அவர்களும் என்னை அழைக்கவில்லை, நானும் அவர்களை அழைக்கவில்லை.

எல்லாம் பொய் அபாண்டமான பொய்.. கொதித்தெழுந்தத டி வில்லியர்ஸ் !! 3

நானும் டுபிளெசிஸும் பள்ளிப்படிப்பு காலத்திலிருந்தே நண்பர்கள். ஆனால் உலகக்கோப்பை அணி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக நான் அவரைத் தொடர்பு கொண்டேன். அப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓரளவுக்கு நல்ல பார்மில் இருக்கிறேன், ஆகவே தேவைப்பட்டால் நான் உலகக்கோப்பையில் ஆடுகிறேன், அதாவது தேவைப்பட்டால் என்றே கூறினேன்.

நான் வற்புறுத்தவும் இல்லை அணிக்குள் பலவந்தமாக நுழையவும் முயற்சிக்கவில்லை. எனவே என் பக்கத்திலிருந்து பற்றி எரியும் பிரச்சினை எதுவும் இல்லை, பெரிய அநீதியும் ஒன்றுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *