நான் ஹிந்து என்பதற்காக என்னை இந்த நாட்டில் ஓரம் கட்டினார்கள் - கதறும் முன்னாள் கிரிக்கெட் வீரர்! 1

நான் ஹிந்து என்பதற்காக என்னை இந்த நாட்டில் ஓரம் கட்டினார்கள் – கதறும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

என் மதத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை ஓரம் கட்டியது என காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தனிஷ் கணெரியா.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான தனிஷ் கணெரியா சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக வந்து கொண்டு இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது பல விமர்சனங்களை முன்வைத்து வரும் கனேரியா, மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

நான் ஹிந்து என்பதற்காக என்னை இந்த நாட்டில் ஓரம் கட்டினார்கள் - கதறும் முன்னாள் கிரிக்கெட் வீரர்! 2

அதில் ஒன்றாக, மதத்தை காரணம் காட்டி சர்ச்சையை கிளப்ப முயற்சிப்பதாக வைத்த விமர்சனத்திற்கு தனிஷ் கணெரியா பதில் அளித்துள்ளார். அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்சனம் முன்வைத்திருக்கும் கனேரியா கடந்த பல ஆண்டுகளாக தான் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதியாக இருந்து அதே நாட்டிற்கு உயரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளை ஆடியதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். அதேபோல் முஸ்லிம்கள் நிறைந்த நாட்டில் ஒரு இந்துவாக இருந்துகொண்டு இத்தகைய உயரத்திற்கு சென்றதும் பெருமை அளிக்கிறது.

நான் ஹிந்து என்பதற்காக என்னை இந்த நாட்டில் ஓரம் கட்டினார்கள் - கதறும் முன்னாள் கிரிக்கெட் வீரர்! 3

ஆனால், மதத்தை காரணம் காட்டி நான் ஒருபோதும் அரசியல் செய்ததில்லை. மாறாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே இரட்டை வேடம் போடுகிறது. அணியின் மத்தியில் முஸ்லீம் வீரர்களுக்கு ஒரு விதமான பாகுபாடும். இந்துவான என்னை ஒரு விதமாகவும் நடத்தியதுமே எனக்கு வருத்தம் தந்தது. அதை வெளிப்படுத்தவே நான் முயற்சி செய்கிறேன்.

ஒருபோதும் மதத்தை காரணம் காட்டி நான் எனக்கு சாதகமாக பேசிக்கொள்ளவில்லை. மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.” என்று பேசியுள்ளார்.

தனிஷ் கனேரியா பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் அரங்கில் 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் இம்ரான் கான் போன்ற ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *