ஒருநாள் தொடரை விளையாடுவது இரண்டாம்தர இந்தியா அணியா இது? - பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தென்னாபிரிக்கா கேப்டன்! 1

விளையாடிவரும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி  பற்றி தனது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் கேசவ் மகராஜ்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான சென்றுள்ளது. அதன் பிறகு சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்க அணியுடன் ஒருநாள் தொடரை விளையாடுகிறது.

கே எல் ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்களுக்கு பதிலாக சுப்மன் கில், இசான் கிஷன், ருத்ராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் ஆடவைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கூடுதல் அனுபவமாக இது இருக்கலாம். மேலும் ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய் போன்ற இளம் பந்துவீச்சாளர்களும் இதில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.

ஒருநாள் தொடரை விளையாடுவது இரண்டாம்தர இந்தியா அணியா இது? - பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தென்னாபிரிக்கா கேப்டன்! 2

முதன்மையான இந்திய அணி ஆஸ்திரேலிய சென்றுவிட்டது. தற்போது இரண்டாம் கட்ட இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் பௌவுமா உடல்நிலை சரியில்லாததால் வெளியேறியுள்ளார். கேப்டன் பொறுப்பில் கேசவ் மகராஜுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

2வது ஒருநாள் போட்டிக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டபோது இந்திய அணி பற்றி கேசவ் மகராஜ் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “தற்போது இருக்கும் இரண்டாம்கட்ட இந்திய அணி இரண்டாம் தரமானது என நான் கருதவில்லை. இந்திய அணி நிர்வாகம் தற்போது இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான நான்கு முதல் ஐந்து சர்வதேச அணியை தயார் செய்யலாம். அந்த அளவிற்கு வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அணியில் இடம்பெற நன்றாக செயல்பட்டு வருகின்றனர். இந்திய அணியிடம் உலகத்தரம் மிக்க பேட்டிங் லைன்-அப் இருக்கிறது. ஐபிஎல் போன்று உலகத்தரமிக்க லீக் தொடர்களில் விளையாடி வருகின்றனர். சர்வதேச போட்டிகளிலும் நன்றாக செயல்படுகின்றனர். ஆகையால் இந்திய அணியை எந்த விதத்திலும் குறைத்து எடை போட முடியாது.” என்றார்.

ஒருநாள் தொடரை விளையாடுவது இரண்டாம்தர இந்தியா அணியா இது? - பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தென்னாபிரிக்கா கேப்டன்! 3

“பலம் மிக்க இந்திய அணியை முதல் ஒருநாள் போட்டியில் வீழ்த்தியது நம்பிக்கையை கொடுத்து வருகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நன்றாக செயல்படுவதற்கும் முயற்சித்து வருகிறேன்.” எனவும் பேசினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *