ஸ்பின்னர்களுக்கு நான் கோச்சிங் கொடுக்க வரவா என்று ராகுல் டிராவிட் இடம் கேட்டேன். ஆனால் என்னை உதாசீனப்படுத்திவிட்டார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
தமிழகத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராகவும் மற்றும் தமிழகத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசகராகவும் இருந்துவரும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், இந்திய அணிக்கு 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 26 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் 76 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 150 க்கும் மேற்பட்ட கிரிக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கவாஸ்கர் காலத்தில் கிரிக்கெட் விளையாடிய இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் குறிப்பாக ரஞ்சிக்கோப்பை, இராணி கோப்பை ஆவியவற்றில் அணிகளுக்கு ஸ்பின் ஆலோசகராகவும், ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராகவும், தனிப்பட்ட சில வீரர்களுக்கும் இருந்திருக்கிறார்.
தொடர்ச்சியாக பல வருடங்கள் கமெண்டரியும் செய்து வரும் இவர் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என பலருடனும் நல்ல நட்புறவில் இருந்துகொண்டு, அவர்களுக்கு தேவையான சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து வருகிறார். மேலும் இவர் சில தவறுகளை கவனத்தில் இருந்தாலும் அதை நேரடியாக அழைத்து சொல்லக்கூடிய அளவிற்கு பலருடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
தற்போது இந்திய அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல் மற்றும் யுசுவேந்திர சகல் ஆகியோர் இருக்கின்றனர். டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்கள் ஏற்படுத்தும் தாக்கம் அளவிற்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் இல்லை. இதனை கவனித்து நான் ஸ்பின் ஆலோசகராக பணிபுரியலாமா என்று ராகுல் டிராவிட் இடம் கேட்டிருக்கிறார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். அதற்கு ராகுல் டிராவிட் என்ன சொன்னார் என்பதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
“நான் ஸ்பின்னர்களுக்கு என்னுடைய ஆலோசனைகளை கொடுக்க வரலாமா என்று டிராவிட்-இடம் கேட்டேன். அதற்கு, நீங்கள் மிகவும் சீனியராக இருக்கிறீர்கள். எனக்கு கீழே பணிபுரிவது சரியாக இருக்காது.” என்று உதாசீனப்படுத்திவிட்டதாக பதிவிட்டிருந்தார்.
I offered my services to Rahul Dravid and he said that I was too senior to him ,to be working under him-with the spinners .
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) March 22, 2023