அந்த பவுலரின் ஆக்சன் கண்டு பலமுறை நான் திணறியிருக்கிறேன்; சச்சின் கூறிய பலவருட ரகசியம்!
அந்த பந்துவீச்சாலரின் பவுலிங் ஆக்சன் என்னை மட்டுமல்ல பலரையும் திணறடித்துள்ளது என பலவருட ரகசியத்தை கூறியுள்ளார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
2003ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அந்த அணிக்காக தொடர்ந்து 17 வருடங்களாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 152 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஆண்டர்சன், 584 விக்கெட்டுகளை டெஸ்ட் அரங்கில் கைப்பற்றியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக இவர் இருக்கிறார். இதன் மூலம், எதிரணிக்கு எந்த அளவிற்க்கு அச்சுறுத்தலாக ஆண்டர்சன் இருந்திருக்கிறார் என நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, ஆண்டர்சன் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஸ்விங் பந்துகளை வீசுவதில் கெட்டிக்காரர் ஆவார்.
இதற்கிடையில் ஆண்டர்சனின் பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேசி புகழாரம் சூட்டியுள்ளார். ஆண்டர்சன் குறித்து சச்சின் கூறுகையில், ” நான் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடிய போது, ஆண்டர்சன் எனக்கு பந்து வீச வந்தார். அவர் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் பந்து முக்கால்வாசி பிச்சை தாண்டிய பிறகு என்னை விட்டு விலகி சென்றது. அப்படி ஒரு பந்து எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. நான் சற்று திணறினேன் என்றே கூற வேண்டும்.
மற்ற வீரர்கள் பந்தை வீசுகையில், நாம் அவர்கள் பந்தை பிடிக்கும் விதம் வைத்து, எந்த பந்தாக இருக்கும் என போதுமான வரை கணித்துவிடலாம். ஆனால் ஆண்டர்சன் பந்துவீச்சில் அவ்வாறு கணிப்பது சற்று கடினம். அவர் ஒவ்வொரு பந்திற்க்கும் தனது கைவிரல்கள் பந்தை பிடிக்கும் ஆக்ஷனை மாற்றிக்கொண்டே இருப்பார்.
அவர் பந்தை ரிலீஸ் செய்யும் விதமும் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும். இதன் காரணமாக நான் அவரை சிறந்த பந்துவீச்சாளராக குறிப்பிட்டேன். இந்த வயதிலும் அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார் என்று பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.” என புகழாரம் சூட்டினார் சச்சின்.