இந்திய அணியை நியாயமா ஆடி ஜெயிக்க சொல்லுங்க, சுத்தமா முடியாது; பிட்ச் ட்ரிக்ஸா ரெடி பண்ணி வர்ற போற அணிகளை வின் பண்றாங்க - முன்னாள் ஆஸி., வீரர் பேச்சு! 1

பிட்ச்சில் வேலையை காட்டாமல், சாதாரணமான விக்கெட்டில் விளையாடினால் இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது என்று பேசியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் ஹீலி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்குகிறது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இந்தியாவிற்கு வந்துவிட்டனர். தங்களது பயிற்சிகளையும் துவங்கிவிட்டனர். அவர்கள் பயிற்சி செய்வதற்காக இரண்டு பிட்ச்களை இந்திய அணி நிர்வாகம் தயார் செய்து கொடுத்திருக்கிறது.

இந்திய அணியை நியாயமா ஆடி ஜெயிக்க சொல்லுங்க, சுத்தமா முடியாது; பிட்ச் ட்ரிக்ஸா ரெடி பண்ணி வர்ற போற அணிகளை வின் பண்றாங்க - முன்னாள் ஆஸி., வீரர் பேச்சு! 2

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீகில் இடம் பெற்றுள்ள இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 எனும் பட்சத்தில் குறைந்தபட்ச வெற்றியைப் பெற்று தொடரை கைப்பற்றினால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குள் நுழைய முடியும் என்பதால், இந்திய வீரர்கள் முழு முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் மிக முக்கியம். கட்டாயம் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற நிலையில் இருப்பதால், எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள். குறிப்பாக பிட்ச்சில் பல்வேறு வேலைத்தனங்களை செய்து வெற்றிபெற முயற்சிப்பார்கள் என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் இயான் ஹீலி.

இந்திய அணியை நியாயமா ஆடி ஜெயிக்க சொல்லுங்க, சுத்தமா முடியாது; பிட்ச் ட்ரிக்ஸா ரெடி பண்ணி வர்ற போற அணிகளை வின் பண்றாங்க - முன்னாள் ஆஸி., வீரர் பேச்சு! 3

“வழக்கமான இந்திய மைதானங்களில் இருக்கும் பிட்ச் போன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தால், துவக்கத்தில் ஓரிரு நாட்கள் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருக்கும். நாளுக்கு நாள் சுழல்பந்து வீச்சிற்கு மைதானம் சாதகமாக மாறி வரும். இப்படி இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி கட்டாயம் வெற்றி பெற்று விடும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக, நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் இருந்ததைப் போல இங்கும் அங்குமாக பந்து பவுன்ஸ் மற்றும் ஸ்பின் ஆனால் கட்டாயம் இந்திய அணி தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

வெற்றி பெறுவதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஏனெனில் இந்த தொடரை கைப்பற்றுவது அவர்களுக்கு முக்கியம். ஆனாலும் நியாயமான முறையில் இந்திய அணி நிர்வாகம் நடந்து கொள்ளும் பட்சத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.” என்று சாடினார்.

இந்திய அணியை நியாயமா ஆடி ஜெயிக்க சொல்லுங்க, சுத்தமா முடியாது; பிட்ச் ட்ரிக்ஸா ரெடி பண்ணி வர்ற போற அணிகளை வின் பண்றாங்க - முன்னாள் ஆஸி., வீரர் பேச்சு! 4

மேலும் பேசிய அவர், “முதல் டெஸ்ட் போட்டியில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் நேத்தன் லையன் இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் விளையாடினால் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *