சென்னை டீம்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சு கூட பாத்தது இல்ல; மகேஷ் தீக்‌ஷன்னா உருக்கம் !! 1

என்னை வெறும் தண்ணீர் அள்ளுவதற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா தெரிவித்துள்ளார்

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரின் துவக்கத்தில், ஜடேஜா தலைமையில் களமிறங்கியது. தோனி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், ஜடேஜாவிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது. ஜடேஜா தலைமையில் மொத்தம் 8 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது, மற்ற போட்டிகள் அனைத்திலும் படுதோல்வியை சந்தித்தது.

சென்னை டீம்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சு கூட பாத்தது இல்ல; மகேஷ் தீக்‌ஷன்னா உருக்கம் !! 2

ஐபிஎல் தொடரில் ராஜாவாக வலம்வந்த சென்னை அணியின் நிலை ரசிகர்கள் மத்தியில் கவலையளிக்கும் வகையில் இருந்தாலும், சென்னை அணியில் ஒரு சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.

குறிப்பாக சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா செயல்பாடு அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது,இவருடைய அபராமன பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக உள்ளதாக பலரும் இவரை பாராட்டியுள்ளனர்.

யார் இந்த மகீஷ் தீக்சனா..??

தற்போதைய ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்படும் வீரர்களில் ஒருவராக வலம் வரும் மகீஷ் தீக்சனா,எப்படி இந்த நிலைமைக்கு வந்தார் என்ற சுவரஸ்ஸ்யாமன தகவலை அவரே தெரிவித்துள்ளார்.

சென்னை டீம்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சு கூட பாத்தது இல்ல; மகேஷ் தீக்‌ஷன்னா உருக்கம் !! 3

அதில், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் நான் தேர்வான பொழுது என்னுடைய எடை 117kg, என்னதான் நான் 19 வயதிற்குட்பட்ட இலங்கை அணியில் தேர்வுவானாளும் என்னை ஒரு போட்டியில் கூட அவர்கள் விளையாட வைக்க வில்லை என்னை வெறும் தண்ணீர் எடுப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள். இதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் அப்பொழுது இலங்கை அணிக்கு விளையாட வேண்டும் என்றால் உடற் தகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற விதி இருந்ததால், உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்பட்டேன், என்னுடைய ஒட்டுமொத்த கடின உழைப்பையும் என்னுடைய உடல் தகுதியும் மேம்படுத்துவதற்காக செய்தேன், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை, 2020 நான் இலங்கை அணியின் முன்னாள் வீரர் அஜந்தா மென்டிஸ் இடம் பேசினேன்,பின் 2022 தோனியிடம் பேசினேன், கடந்த வருடமே நான் சென்னை அணிக்காக நெட் பவுலராக விளையாடினேன், ஆனால் ஒரு பொழுதும் சென்னை அணி, என்னை தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று மகீஷ் தீக்சனா தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published.