இஷான் கிஷன் அடித்ததை விட, சுப்மன் கில் அடிச்ச டபுள் செஞ்சுரி தான் பெஸ்டுன்னு சொல்லுவேன் – ரோகித் சர்மா விளக்கம்!

இஷான் கிஷனை விட சுப்மன் கில் அடித்த இரட்டை சதம் சிறந்தது என விளக்கம் கொடுத்திருக்கிறார் ரோகித் சர்மா.

நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய துவக்க வீரர் சுப்மான் கில் 145 பந்துகளில் இரட்டை சதம் அடைத்தார். இவர் 19-4கள், 9-6கள் உட்பட 149 பந்துகளில் 208 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் டிசம்பர் மாதம் வங்கதேசம் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்தார். அதன்பிறகு, நடந்த இலங்கை ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை. சுப்மன் கில் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தது.

அதே இலங்கை தொடரின் முதல் போட்டியில் 70(60) ரன்கள், 3வது போட்டியில் 116(97) ரன்கள் விளாசினார். இப்போது இரட்டை சதம் அடித்திருகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பிற்ரு முழுக்க முழுக்க நியாயம் செய்து, அணிக்கும் முக்கிய பங்கேற்றியுள்ளார்.

இந்நிலையில் போட்டி முடிந்தபின், இதற்கு முன்னர் இரட்டை சதமடித்த இஷான் கிஷன், ரோகித் சர்மா மற்றும் புதிதாக இரட்டை சதமடித்த சுப்மன் கில் ஆகியோர் பேசினர். அப்போது இரட்டை சதமடித்த குழுவிற்கு உன்னை வரவேற்கிறோம் என்று சுப்மன் கில்-க்கு இருவரும் வாழ்த்தினர்.

அதன்பிறகு பேசிய ரோகித் சர்மா கூறுகையில், இருவரில் யாருடைய இரட்டை சதம் பெஸ்ட் என தேர்வு செய்து விளக்கமளித்தார். ரோகித் பேசியதாவது:

“நம்முடன் இரண்டு இளம் இரட்டை சதம் அடித்த வீரர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவருடைய இரட்டை சதத்தை பற்றி நான் பெரிதாக பேசினால் மற்றொருவருடையது சிறுமைப்படுத்தியது போல ஆகிவிடும். அது எனது எண்ணம் அல்ல. இரண்டு பேருமே தரமான வீரர்கள்.

இரட்டை சதம் அடித்த இரண்டு பேரின் போட்டிகளை வைத்துப்பார்க்கையில், சுப்மன் கில் இரட்டை சதம் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். ஏனெனில் ஒரு பக்கம் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வருகின்றனர். அவை எதுவும் தன்னுடைய ஆட்டத்தை பாதிக்காதவாறு, சிறப்பாக பந்துகளை கையாண்டு இரட்டை சதம் அடித்து காட்டியுள்ளார். குறிப்பாக இந்த போட்டியில் சுப்மன் கில் அடித்த 208 ரன்களுக்கு அடுத்த அதிகபட்சமாக இருப்பது 34 ரன்கள் தான். இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம் எத்தகைய தாக்கத்தை சுப்மன் கில் ஏற்படுத்தியிருக்கிறார் என்று. இதனடிப்படையில் மட்டுமே சுப்மன் கில் அடித்த இரட்டை சதம் பெஸ்ட் என்று கூறுகிறேன்.” என பேசினார்.

Mohamed:

This website uses cookies.