இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் டாம் பெஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவரால் 5 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதற்குப் பின்னர் தற்பொழுது நடைபெற்ற போட்டி தொடரில் 10 போட்டிகளில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்
மிக அற்புதமாக விளையாடி வரும் அவர் இந்தியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் தன்னுடைய முழு திறமையை காண்பிக்க போவதாகவும் தற்போது அவர் கூறியிருக்கிறார்.

சமீப காலத்தில் மிகக் கடுமையாக நான் உழைத்திருக்கிறேன்
கவுன்டி தொடரில் யோர்க்ஷிரே அணிக்காக அனைத்து ரீதியிலும் நான் மிக அற்புதமாக என்னுடைய உழைப்பை போட்டிருக்கிறேன். 10 போட்டிகளில் மிக அற்புதமாக செயல்பட்டு என்னுடைய முழு திறமையை காண்பித்து காரணத்தினால் எனக்கு இந்திய அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள உள்ளேன். இந்திய அணி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் மிக சிறப்பாக விளையாடும் அணி. தற்போது அந்த பயத்திலேயே நான் என் மனதுக்குள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
என்னுடைய முழு திறமையை நான் இந்தியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் காண்பிக்க தயாராக இருக்கிறேன். நிச்சயமாக இந்திய அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் கவனமாக விளையாட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தியாவுக்கு எதிராக என்னுடைய முழு திறமையை காண்பிக்க தயார் என்று டாம் பெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்து ஆஷஸ் தொடர்
அதேசமயம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த உடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. எனவே அது பற்றிய கவனம் என் மனதுக்குள் இருக்கிறது. இதில் நன்றாக பங்களித்து, முழு தன்னம்பிக்கையுடன் அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடவும் ஆர்வமாக உள்ளேன். என்னுடைய சமீப கால உழைப்பு என்னுடைய கேரியருக்கு சரியான வகையில் கை கொடுக்கும் என்றும் இறுதியாக அவர் கூறி முடித்தார்.