டி.20 உலகக்கோப்பை கூட முக்கிய இல்ல...என்னோட ஒரே ஆசை இப்ப இது தான்; சாஹல் ஓபன் டாக் !! 1

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தொடரின் ஆணிவேராக கருதப்படும் டெஸ்ட் தொடரில், இந்திய அணி இன்றளவும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

சர்வதேச டெஸ்ட் தொடருக்கான அணிகளின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி கடந்த சில தொடர்களில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது.

டி.20 உலகக்கோப்பை கூட முக்கிய இல்ல...என்னோட ஒரே ஆசை இப்ப இது தான்; சாஹல் ஓபன் டாக் !! 2

இதற்கு காரணம் இந்திய அணியில் போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெறாதது தான் என்று ஒரு சாரார் தெரிவித்து வந்தாலும், லிமிடெட் ஓவர் போட்டிகளான t20 மற்றும் ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடருக்கான மவுசை குறைந்துவிட்டது என்றும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடர் அதிக பணம் பெறும் போட்டியாக இருப்பதால் அனைவரும் அதில் விளையாட வேண்டும் என்று ஆர்வம் காட்டி டெஸ்ட் தொடரை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை என்று யுவராஜ் சிங் உட்பட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் சஹால் தனக்கு டெஸ்ட் தொடரில் விளையாடுவது தான் விருப்பமானது என்று தெரிவித்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பை கூட முக்கிய இல்ல...என்னோட ஒரே ஆசை இப்ப இது தான்; சாஹல் ஓபன் டாக் !! 3

அதில் அவர் தெரிவித்ததாவது, நான் கடந்த பத்து ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதுதான் எனக்கு முதன்மையானது, ஒரு டெஸ்ட் வீரராக இருப்பது என்பது வித்தியாசமான ஒன்றாகும், தற்பொழுது வீரர்கள் பலரும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறார்கள் ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தான் உண்மையில் நமக்கு சவாலான ஒன்றாகவும், நம்முடைய திறமையை மற்றும் பொறுமையை பரிசோதிப்பதற்கு உதவியாகவும் இருக்கும் என்று சஹால் தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *