தயவு செஞ்சு என்ன நிம்மதியா விளையாட விடுங்க... என்னோட ஒரே ஆசையே இது தான்; ஆண்ட்ரியூ ரசல் வேதனை !! 1

விண்டீஸ் அணிக்காக இரண்டு உலகக்கோப்பைகளை வென்று கொடுப்பதே தனது தற்போதைய இலக்கு என விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆண்ட்ரியூ ரசல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரு போட்டியில் கூட பங்கு பெற்று விளையாடாமல் உலகின் பல்வேறு திசைகளிலும் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல்,வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லீக் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டார்.

தயவு செஞ்சு என்ன நிம்மதியா விளையாட விடுங்க... என்னோட ஒரே ஆசையே இது தான்; ஆண்ட்ரியூ ரசல் வேதனை !! 2

நாட்டை விட இவர்களுக்கு பணமே முக்கியம் என்று கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான ஆண்ட்ரே ரசல், பங்களாதேஷ், இந்தியா என வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர் தோல்விகளை தழுவிய பொழுதும் தனது அணிக்காக விளையாடாமல் ஒதுங்கி இருந்தார்.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன்ஸ் நாட்டிற்காக விளையாடுங்கள் என்று நான் ஒவ்வொரு வீரனிடம் போய் பிச்சை கேட்க முடியாது என்று ஆண்ட்ரே ரசலை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார்.

தயவு செஞ்சு என்ன நிம்மதியா விளையாட விடுங்க... என்னோட ஒரே ஆசையே இது தான்; ஆண்ட்ரியூ ரசல் வேதனை !! 3

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பங்கேற்று தனது அணிக்கு இரண்டு உலகக் கோப்பையை வெற்றிபெற்று கொடுப்பேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, “நான் மீண்டும் விளையாடி திருப்பி கொடுப்பதற்கு ஆசைப்படுகிறேன், இறுதியில் எது நடக்குமோ அதுதான், எங்களுக்கு குடும்பம் உள்ளது நிச்சயம் இந்த முறை கிடைத்திருக்கும் சரியான வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வேன், இது முதலில் இருந்து ஆரம்பிப்பது போல் கிடையாது, எனக்கு தற்பொழுது 34 வயதாகிறது நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அடுத்த உலக கோப்பையை வெற்றி பெற்று அல்லது இரண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்று கொடுப்பேன், நான் தற்பொழுது இங்கு உள்ளேன் (HUNDRED) அதற்கான ஏற்பாடுகளை நாளுக்கு நாள் செய்து வருகிறேன்”என்று ஆண்ட்ரே ரசல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.