78 பந்தில் 140 ரன்களை விளாசி இந்திய பவுலர்களை புரட்டியெடுக்க உதவியது, இந்திய வீரரோட பேட்டிங் தான் - நியூசிலாந்து வீரர் பேட்டி! 1

ஷுப்மன் கில் பேட்டிங் ஆடியதை பார்த்தபோது, மைதானம் பேட்டிங் செய்ய நன்றாகவே இருக்கிறது என உணர்ந்து அடிக்க ஆரம்பித்தேன் என பேசியுள்ளார் மைக்கல் பிரேஸ்வெல்.

ஹைதராபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் அடித்திருந்தது.

இந்திய அணி இவ்வளவு பெரிய ஸ்கொரை எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது துவக்க வீரர் ஷுப்மன் கில் பேட்டிங். இவர் அபாரமாக விளையாடி 19 ஃபோர்கள், 9 சிக்ஸர்கள் உட்பட 208 ரன்களை விளாசினார்.

78 பந்தில் 140 ரன்களை விளாசி இந்திய பவுலர்களை புரட்டியெடுக்க உதவியது, இந்திய வீரரோட பேட்டிங் தான் - நியூசிலாந்து வீரர் பேட்டி! 2

இதனையடுத்து இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த நேரத்தில் நாயகன் போல உதயமாகி இந்திய பந்துவீச்சாளர்களை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக வெளுத்து வாங்கினார் மைக்கல் பிரேஸ்வெல். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி படுதோல்வியை சந்திக்கப் போகிறது என பலரும் எதிர்பார்த்த நிலையில் இருந்து ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை போராடி இந்திய வீரர்களுக்கு பீதியை ஏற்படுத்தினார்.

கடைசி ஓவரில் 20 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போதும் ஒரு சிக்சர் அடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். துரதிஷ்டவசமாக அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேற, நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

78 பந்தில் 140 ரன்களை விளாசி இந்திய பவுலர்களை புரட்டியெடுக்க உதவியது, இந்திய வீரரோட பேட்டிங் தான் - நியூசிலாந்து வீரர் பேட்டி! 3

78 பந்துகளில் 140 ரன்கள் விளாசிய மைக்கல் பிரேஸ்வெல் போட்டி முடிந்த பிறகு பேசுகையில்,

“மைதானம் பேட்டிங் செய்ய நன்றாகவே இருக்கிறது என்று ஷுப்மன் கில் பேட்டிங் செய்தபோது நான் உணர்ந்து கொண்டேன். பந்து பழைய பந்தாக மாறும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு நிதானமாக பாட்னர்ஷிப் அமைத்தோம்.

நிறைய ஸ்கோர் சேஸ் செய்யவேண்டியது இருக்கிறது. எனவே புதிதாக ட்ரை செய்யலாம் என்று எந்த முயற்சியையும் நாங்கள் எடுக்கவில்லை. பொறுமையாக கிடைத்த பந்துகளில் எல்லாம் பவுண்டரி சிக்ஸர்கள் அடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சித்தோம். எந்த ஒரு வீரரும் வெற்றி பெற வேண்டும் என்றே களம் இறங்குவார். அதுபோல நானும் களமிறங்கி போராடினேன். கடைசியில் 12 ரன்கள் குறைவாக பெற்று தோல்வியடைந்தது வருத்தம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் அணிக்கு முக்கிய பங்காற்றியதில் பெருமகிழ்ச்சியை அடைகிறேன். போட்டியில் இரட்டை சதம் ரன்கள் அடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்லுக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

78 பந்தில் 140 ரன்களை விளாசி இந்திய பவுலர்களை புரட்டியெடுக்க உதவியது, இந்திய வீரரோட பேட்டிங் தான் - நியூசிலாந்து வீரர் பேட்டி! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *