சண்டிகரில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது அசாத்திய அதிரடியில் 3-வது இரட்டைச் சதம் அடித்தது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியிருப்பதால் இந்தப் பிட்சை நன்கு அறிவேன் என்றார் இலங்கை கேப்டன் திசர பெரேரா. மேலும் தரம்சலாவை விட நல்ல பிட்ச் என்று சான்றிதழும் வழங்கி முதலில் பவுலிங்கையும் தேர்வு செய்தார், பிட்ச் பற்றிய அவரது கணிப்பு தவறாக இருந்திருக்கலாம், ஆனால் உளவியல் ரீதியாக அவர் முடிவு சரியானதே, ஏனெனில் கடந்த போட்டியில் 29/7 என்று சரிந்த இந்திய டாப் ஆர்டர் அதற்குள் மீண்டெழ வாய்ப்பில்லை என்று அவர் கருதியது தன்னம்பிக்கையே.
இந்நிலையில் முதல் 10 ஓவர்களில் அவரது கணிப்பிற்கு இணங்க ரோஹித், தவண் 33 ரன்களையே எடுத்தனர், ஆனால் கடைசி 10 ஓவர்களில் 147 ரன்கள் விளாசப்பட்டது, காரணம் யார்க்கர் முயற்சிகள் அனைத்தும் புல்டாஸ்களானதே.
இந்நிலையில் ரோஹித் சர்மாவுடம் 223 ரன்கள் கூட்டணி மேற்கொண்ட ஷ்ரேயஸ் ஐயர், ரோஹித் இன்னிங்ஸ் பற்றி கூறும்போது, “எதிர்முனையில் நான் ஒரு பார்வையாளனானேன். ரோஹித் தனது முதல் சதத்தை 112 பந்துகளில் எடுத்தார் (115 பந்துகள்), அதன் பிறகு ரோஹித் சர்மா ஷோதான்.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
நேற்று வலைப்பயிற்சியில் பேட் செய்தேன், அதே தன்னம்பிக்கையை களத்திற்கும் எடுத்துச் சென்றேன். எனது இயல்பூக்கங்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கொஞ்சம் குளிராக இருந்தது, பிட்ச் பேட்டிங்குக்கு நல்ல பிட்ச்தான். மிகப்பெரிய ரன் எண்ணிக்கையை எட்டியுள்ளோம்.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
நானும் ரோஹித் சர்மாவும் 40-வது ஓவர் வரை கொண்டு செல்ல திட்டமிட்டோம். எங்களில் யாராவது ஒருவர் களத்தில் நின்றால் புதிதாக இறங்குபவர்களுக்கு அது மிகப்பெரிய உத்வேகமாக அமையும் என்பதே திட்டம். ரோஹித் சர்மா ஆட்டத்தை கொஞ்சம்தான் பார்த்தேன், ஆனாலும் அதிர்ச்சிகரமான ஆட்டம்” என்றார்.