உண்மையை சொல்லனும்னா என்னால தூங்கவே முடியல... ராஞ்சி டெஸ்ட் போட்டி குறித்து பேசிய துருவ் ஜூரல் !! 1
உண்மையை சொல்லனும்னா என்னால தூங்கவே முடியல… ராஞ்சி டெஸ்ட் போட்டி குறித்து பேசிய துருவ் ஜூரல்

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் சிலர் இல்லாமல் இங்கிலாந்து அணியை  இந்திய அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. சமகால கிரிக்கெட்டில் வலுவான டெஸ்ட் அணியாக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணி, இளம் வீரர்கள் அதிகமானோரை கொண்ட தற்போதைய இந்திய அணியால் வீழ்த்த முடியாது என்றே பலரும் கருதினர், ஆனால் முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று போட்டியிலும் மிகப்பெரும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கெத்தாக கைப்பற்றியது.

உண்மையை சொல்லனும்னா என்னால தூங்கவே முடியல... ராஞ்சி டெஸ்ட் போட்டி குறித்து பேசிய துருவ் ஜூரல் !! 2

இந்திய அணியின் இந்த வெற்றியில் துருவு ஜூரல், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் போன்ற இளம் வீரர்கள் பலரே மிக முக்கிய காரணமாக திகழ்ந்து வருகின்றனர். இதில் குறிப்பாக இளம் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியிலும் மிக முக்கிய பங்காற்றினார்.

பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் துருவ் ஜூரலை, முன்னாள் வீரர்கள் சிலர் தோனியுடன் ஒப்பிட்டு பேசி வரும் நிலையில், நான்காவது போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து துருவ் ஜூரல் ஓபனாக பேசியுள்ளார்.

உண்மையை சொல்லனும்னா என்னால தூங்கவே முடியல... ராஞ்சி டெஸ்ட் போட்டி குறித்து பேசிய துருவ் ஜூரல் !! 3

இது குறித்து துருவ் ஜூரல் பேசுகையில், “நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு என்னால் இரவில் தூங்கவே முடியவில்லை. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது என்ன செய்ய வேண்டும், எப்படி விளையாட வேண்டும், எதை செய்தால் நீண்ட நேரம் களத்தில் இருக்கலாம் என்பதை இரவு முழுவதும் யோசித்து கொண்டே இருந்தேன். நான் என்ன செய்தால் அது இந்திய அணிக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எங்களது டெய்லண்டர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தேன். அவர்கள் மீதான நம்பிக்கையே அவர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும், அதன்மூலம் இந்திய அணிக்கும் பயன் கிடைக்கும். இந்திய அணியின் வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய துருவ், “நான் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த உடன் எனது பெற்றோருக்கு தகவலை தெரிவித்தேன், அவர்களே என்னை இந்த மகிழ்ச்சியை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்தினார்கள். எனது அம்மாவிற்கு கிரிக்கெட் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது, நான் இந்திய அணிக்காக விளையாட போகிறேன் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். நான் விளையாட போட்டியையும் அவர்கள் பெரிதாக பார்க்கவில்லை, நான் விக்கெட்டை இழந்துவிடுவேன் என்ற அச்சத்தில் தான் அவர்கள் நான் விளையாடியதை பார்க்கவில்லை. நான் எடுத்த ரன்கள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் பிடித்த கேட்ச்கள் குறித்து மட்டுமே கேட்டு அறிந்து கொண்டார்கள். இந்திய அணியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது எனது பெற்றோருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *