பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியின் தோல்விக்கு மோசமான பிட்ச் தான் காரணமா..? உண்மையை வெளிப்படையாக பேசிய பென் ஸ்டோக்ஸ்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததற்கு ஆடுகளத்தை குறை கூற விரும்பவில்லை என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை இலகுவாக வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கியது. முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி முழு ஆதிக்கம் செலுத்தி நான்கு போட்டிகள் முடிவில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

சமகால கிரிக்கெட்டில் வலுவான அணிகளில் ஒன்றான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் சிலர், மோசமான பிட்ச்களே இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் என பேசி வரும் நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸோ இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பிட்சை குறை சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பென் ஸ்டோக்ஸ்  பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமெனில், இந்த தொடர் துவங்குவதற்கு முன்பு ஆடுகளம் எப்படி இருக்க போகிறது என்றே ஐடியாவே எனக்கு கிடையாது. நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ராஞ்சி ஆடுகளத்தின் தன்மை மாறி கொண்டே இருந்தது ஆச்சரியமளித்தது. எங்களது தோல்விக்கு பிட்சை குறை சொல்லவே முடியாது. இந்திய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடர் எங்களுக்கு அதிக சவால் நிறைந்த தொடராக உள்ளது, அதேவேளையில் இது மிக சிறந்த தொடர். இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளுக்கான ஆடுகளமுமே மிக சிறப்பாக இருந்தது என்பதே உண்மை. எங்களை விட இந்திய அணி இந்த ஆடுகளத்தில் வலுவான அணியாக உள்ளது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக மாறிவிட்டால் பேட்ஸ்மேன்களுக்கு அது பெரிய சவால் தான். நான்கு போட்டிகளுக்கான ஆடுகளமும் சிறப்பாகவே இருந்தது என்பதால் நான் ஆடுகளத்தை பற்றி எந்த குறையும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *