கோஹ்லி கிடையாது.. எனது ரோல் மாடல் இவர் தான்; இளம் வீரர் ஓபன் டாக் !!
முன்னாள் கேப்டன் தோனியின் கிரிக்கெட் வீடியோக்களை பார்த்து தான், தான் கேப்டன்சி குறித்த முக்கிய நுணுக்கங்களை கற்று கொண்டதாக இளம் வீரரான ப்ரியம் கர்க் தெரிவித்துள்ளார்.
மீரட்டில் பிறந்த பிரியம் கர்க் U-19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார் இவர் தோனியை போலவே அமைதியாகவும் சிறப்பாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்து செயல்பட்டதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டிற்கும், முன்னாள் வீரர்கள் பலரின் பாராட்டிற்கு ஆளானார்.
U-19 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா சவுத் ஆப்பிரிக்கா நியூசிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் கூட இவர் தலைமையிலான இந்திய இளம் படை அசால்டாக வீழ்த்தியது. இதன் பின் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் உடன் மோதிய இந்திய அணி மழை மற்றும் டி.ஆர்.எஸ் காரணமாக தோல்வியடைந்து, கோப்பையையும் பறிகொடுத்தது.
உலகக்கோப்பையை தவறவிட்ட நிலையிலும், போட்டி முடிந்த பிறகு நிதானமாகவும் மற்ற வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ப்ரியம் கர்க் பேசியது, தோனியை நினைவுபடுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், தான் தோனியின் கிரிக்கெட் வீடியோக்களை பார்த்து தான் கேப்டன்சி குறித்தான நுணுக்கங்களை கற்று கொண்டதாக ப்ரியம் கர்க் ஓபனாக தெரிவித்துள்ளார்.
பிரியம் கர்க் தோனி குறித்து கூறியதாவது;
நான் தோனியின் ஒரு மிகப்பெரிய ரசிகன். அவரின் விளையாட்டு வீடியோக்களை ஒன்று விடாமல் பார்ப்பேன், அதில் எனக்கு பெரிய பாடம் உள்ளது. உதாரணமாக போட்டியின் எந்த சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் எவ்வாறு பதட்டப்படாமல் நிலைமையை சரி செய்ய வேண்டும் போன்றவற்றை தோனியின் வீடியோக்களை பார்த்து தான் காற்று கொண்டேன்.
எனது ரோல் மாடலே தோனி தான், நான் அவரைப் போலவே பேட்டிங்கையும் கேப்டன்ஷியையும் கற்றுக் கொண்டுள்ளேன். குறிப்பாக இக்கட்டான சூழ்நிலையில் மௌனம் காத்து நிலைமையை சரி செய்வது எவ்வாறு என்றும் கற்றுக் கொண்டுள்ளேன். கேப்டன்ஷிப், பேட்டிங்,பீல்டு செட்டிங் போன்ற நிறைய விஷயங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது” என்றார் ப்ரியம் கர்க்.
ஐ.பி.எல் 2020ம் ஆண்டு தொடருக்கான ஏலத்தின் போது ப்ரியம் கர்க்கிற்காக அனைத்து அணிகளும் போட்டி போட்டு இறுதியாக ப்ரியம் கர்க் 1.9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.