2017ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரஷித் கான் விளையாடி வருகிறார். அன்று முதல் இன்று வரை அந்த அணியின் தவிர்க்க முடியாத ஒரு பவுலராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணிகள் மிக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் தற்பொழுது காணப்பட்ட ரஷீத் கான் தன்னுடைய ஐபிஎல் கேரியரில் மறக்க முடியாத போட்டி இதுதான் என்று கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போற்றி
2011 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி மிக சிறப்பாக விளையாடியது. அந்த அணி 2-வது தகுதி சுற்று போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். எனவே அந்தப் போட்டியை வெல்லும் முனைப்போடு ஹைதராபாத் அணி விளையாட தொடங்கியது.
ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி இறுதியில் ரன் குவிக்க தடுமாறிய நிலையில், இறுதியாக வந்த ரஷீத் கான்
10 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இறுதியில் ஹைதராபாத் அணியை மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வைத்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாது அதன் பின்னர் 2-வது இன்னிங்சில் பவுலிங் மூலம் ஐதராபாத் அணியின் வெற்றியை மேலும் உறுதிப் படுத்தினார்.

நான்கு ஓவர் மொத்தமாக வீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் கைப்பற்றிய 3 விக்கெட்டுகள் கிருஸ் லின், ராபின் உத்தப்பா மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகும். அந்தப் போட்டியின் மேன் ஆப் தி மேட்ச் விருது அவருக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அந்தப் போட்டியை எனது வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன்
ரஷித் கான் இந்த போட்டியை தான் தனது வாழ்நாளில் மறக்க முடியாத போட்டியாக கருதுவதாக அப்பொழுது கூறியிருக்கிறார். எவ்வளவு போட்டிகளில் விளையாடி இருந்தாலும் நான் விளையாடிய அந்தப் போட்டி அவ்வளவு எளிதில் என்னால் மறந்துவிட முடியாது.

எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது அன்று இரவு நான் மிக உற்சாகமாக இருந்தேன். எனது வாழ்நாளில் நான் மிகவும் உற்சாகமாக இருந்த ஒரு இரவு அது. எனவே அந்தப் போட்டியை, இதுவரை நான் பங்கெடுத்து விளையாடி ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஐபிஎல் போட்டியாக பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.