டீம்ல இந்த சேஞ்ச் மட்டும் பண்ணுங்க.. அப்புறம் பாருங்க இந்தியாவின் கொட்டம் அடங்குதா இல்லையான்னு? அப்படி என்ன மாற்றம்? – ஐடியா கொடுத்த ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்!

இரண்டாவது டெஸ்டில் இப்படியொரு மாற்றத்துடன் களமிறங்குங்கள், ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று பேசியுள்ளார் மிட்ச்சல் ஜான்சன்.

இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

துவக்கம் முதல் இறுதி வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. டேவிட் வார்னர் மற்றும் கவாஜா இரண்டு பேரும் மோசமான துவக்கம் கொடுத்தனர். டேவிட் வார்னர் இந்தியாவில் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடி வெறும் 399 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இவரது சராசரி வெறும் 22 மட்டுமே.

வார்னரின் புள்ளி விவரங்கள் கூறுவதைப் போலவே முதல் டெஸ்ட் போட்டியும் அமைந்தது. ஒரு ரன் மற்றும் 10 ரன்கள் என இரண்டு இன்னிங்சில் சேர்த்து படுமோசமாக பேட்டிங் செய்தார்.

இந்நிலையில் டேவிட் வார்னர் வெளியில் அமர்த்தப்பட்டு டிராவிஸ் ஹெட் உள்ளே எடுத்து வரப்பட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் மிச்சல் ஜான்சன்.

“அடுத்த டெஸ்டில் டேவிட் வார்னர்-க்கு பதில் மேட் ரென்ஷா ஓப்பனிங் செய்ய வேண்டும். டிராவிஸ் ஹெட் ஓபனிங் இடத்தில் களமிறங்க வேண்டும். இந்திய மைதானங்களில் டேவிட் வார்னரின் ஸ்கோர் மிக மோசமாக இருக்கிறது. அவரைப் பிளேயிங் லெவனில் கொண்டு வந்தது தான் ஆஸ்திரேலிய அணிக்கு பெருத்த பின்னடைவை தந்திருக்கிறது.

நீண்ட காலமாக டேவிட் வார்னரை நாம் பார்த்து வருகிறோம். அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிகிறது. ஆனால் இந்திய மைதானங்களில் இருக்கும் புள்ளி விவரங்களை வைத்து முதல் போட்டியில் அணியை தேர்வு செய்திருக்க வேண்டும்.

அதனடிப்படையில் குறைந்தபட்சம் அடுத்த போட்டியில் வார்னருக்கு வாய்ப்பை கொடுத்திருக்கலாம். 4வது இடத்தில் டேவிட் வார்னரை களம் இறக்கினாலும் அது சிக்கல்தான். ஏனெனில் ஆரம்பத்தில் அஸ்வின் வீசுவார். சில ஓவர்கள் கழித்து ஜடேஜா வீசுவார். அப்போதும் சிக்கல் தான். ஆகையால் அவருக்கு வெளியில் அமர்த்தி வேறொருவருக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். நான் எனது ஓபனிங் பேட்ஸ்மேன்கள் விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன். இவர்கள் இருவரும் தான் ஒப்பனிங் செய்ய வேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.