அத நினைச்சாலே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது, ரஹானே ஓபன் டாக் !! 1

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மென் ரஹானே செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சிறப்பாக செயல்பட்டதை எல்லாம் மறந்துவிட்டு குறையை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் அஜிங்கிய ரஹானே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியை தலைமை தாங்கி இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை செய்வதற்கு உதவியாக இருந்துள்ளார்.

அத நினைச்சாலே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது, ரஹானே ஓபன் டாக் !! 2

பல அனுபவ வீரர்கள் இல்லாத நிலையிலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்திய சாதனை மகன் அஜிங்கியா ரஹானேவை தற்பொழுது கிரிக்கெட் பற்றிய எந்த அறிவும் இல்லாத நபர்களும் விமர்சிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அஜிங்கிய ரஹானே பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அத நினைச்சாலே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது, ரஹானே ஓபன் டாக் !! 3

அதில், “நான் என்ன செய்தேன் என்பது எனக்கு நன்றாக தெரியும் மற்ற யாரும் அதைப் பற்றி பேச தேவையில்லை, இயற்கையாகவே நான் செய்யாத செயலுக்கு பாராட்டை விரும்ப மாட்டேன். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நான் எடுத்த சில முடிவுகள் மற்றும் மாற்றங்கள் நினைத்து சந்தோஷப் படுகிறேன், என்னுடைய ஒட்டுமொத்த சந்தோஷம் என்னவென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்தது, உண்மையில் அது ஒரு மறக்க முடியாத தருணம். ஆனால் போட்டிக்கு பின் நடைபெற்ற விஷயங்கள் நினைத்து எனக்கு சிரிப்பாக வருகிறது நாங்கள் செய்த சாதனைக்கும் நாங்கள் எடுத்த முடிவுக்கும் வேறொரு கூட்டம் பாராட்டைப் பெற்று கொண்டது, குறிப்பாக மீடியாவில் நாங்கள் செய்தோம் நாங்கள் முடிவு எடுத்தோம் என்று பெருமை அடித்துகொண்டார்கள். ஆனால் இதையெல்லாம் செய்த எங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும். உடனே நான் சென்று நிர்வாகத்திடம் பேசினேன் அப்பொழுது அதை பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பாக வந்தது என்று ரஹானே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *