இவருக்கு வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க ,ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான் ; முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி !! 1
இவருக்கு வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க ,ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான் ; முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது போல் ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் ரஹானேவிற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அஜிங்யா ரஹானேவை, 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்தபோது ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே ரஹானேவை கிண்டல் செய்தது.

இவருக்கு வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க ,ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான் ; முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி !! 2

ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் டி20 தொடரிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த அனுபவ வீரர் ரஹானே,2023 ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அசுரவேகத்தில் அரைசதம் அடித்து எண்ட்ரீ கொடுத்து ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்காக தன்னுடைய பங்களிப்பை சரியாக செய்துவருகிறார்.

குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ரகானே தான் பங்கேற்ற போட்டிகளில்61, 31, 37, 9, 71*, மற்றும் 15 ரன்கள் அடித்து மொத்தம் 224 ரன்கள் அடித்து டி.20 தொடரில் புதிய அவதாரமெடுத்துள்ளார்.

இவருக்கு வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க ,ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான் ; முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி !! 3

இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ரஹானேவை வெகுவாக பாராட்டி வருவதோடு இவருக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணிக்கு அறிவுரையும் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி குறித்தும் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் வீரர்கள் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் ரகானேவிற்கு ஒரு நாள் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இவருக்கு வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க ,ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான் ; முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி !! 4

இதுகுறித்து ஸ்ரீசாந்த் பேசுகையில்.,ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஜிங்யா ரஹானே இடம்பெறுவதை நான் விரும்புகிறேன்,அப்படி நடந்தால் அது இந்திய அணியின் தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தைரியமான முடிவாக இருக்கும்.ரஹானே நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மிக சிறப்பாக செயல்படுவார்.ஆனால் அந்த ஆட்டத்தை மட்டும் வைத்து அவரை எடைபோட முடியாது.அவருக்கு நிச்சயம் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் வாய்பளிக்க வேண்டும்,ஒருவேளை அவருக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் அவ்வாறு 4 வது பேட்டிங் ஆர்டரில் விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்,நிச்சயம் அவர் அணியில் இடம்பெற்றால் அவர் நாட்டிற்காக சிறப்பாக பங்காற்றுவார் என ரஹானே குறித்து ஶ்ரீஷாந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு வந்துள்ள ரஹானேவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *