Cricket, Chris Gayle, KXIP, IPl 2018

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

11வது சீசன் இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கி அனைத்து அணிகளும் குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது விளையாடி இருக்கிறது. முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற நான்கு அணிகளுள் ஒன்று தான் கிங்ஸ் XI பஞ்சாப். ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணி ஐபில் ஏலத்தில் நட்சத்திர வீரர்களை வாங்கியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அதிரடி ஆட்டக்காரர்களான யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெய்லயும் வாங்கியது.

முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக வெற்றியை பெற்று அசத்தியது கிங்ஸ் XI பஞ்சாப் அணி. டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன் அடிக்க யுவராஜ் சிங் திணற, அணியில் இடம் பிடிக்க தவறிவிட்டார் கிறிஸ் கெய்ல். இதனால், வாய்ப்புக்காக காத்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர்.

வேட்டையாட காத்திருக்கும் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் 1

முதல் போட்டியில் கிறிஸ் கெய்ல் இல்லாததை பற்றி கேட்ட போது, “இது சரியென தோன்றியதால், அணி எடுத்த முடிவு அது. ஒரு முறை நல்ல அணி கிடைத்து விட்டால், நாங்கள் அவர்களை நம்பவேண்டும், மேலும் அந்த அணியை வைத்து தான் விளையாட வேண்டும்,” என கேப்டன் ரவி அஸ்வின் கூறினார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக நட்சத்திர வீரர் லோகேஷ் ராகுல் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால், டெல்லி அணியை எளிதாக வீழ்த்தியது கிங்ஸ் XI பஞ்சாப் அணி.

வேட்டையாட காத்திருக்கும் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் 2

அந்த போட்டியின் போது வெளியே உட்காருவது பற்றி கிறிஸ் கெய்லிடம் கேட்டார் பிரெட் லீ.

“நான் கடந்த சில நாட்களாக நல்ல பயிற்சி எடுத்து வருகிறேன் மற்றும் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். நான் நடுவில் அணியில் இடம் பெற காத்திருக்கிறேன். நான் அமைதியாக காத்திருக்க வேண்டும்,” என கிறிஸ் கெய்ல் கூறினார்.

“நான் உடல்நலத்துடன் உள்ளேன் மற்றும் கிரிக்கெட் விளையாட காத்திருக்கிறேன். ரசிகர்கள் எப்போதும் பொழுதுபோக்காக இன்னிங்க்ஸை எதிர்பார்ப்பார்கள். இதனால், என்னால் முடிந்த வரை நான் கிரிக்கெட் விளையாடுவேன்,” என அவர் மேலும் கூறினார்.

Cricket, Chris Gayle, KXIP, IPl 2018

“நான் எப்போது பேட்டிங் விளையாட சென்றாலும் என்னிடம் இருந்து சதமோ அல்லது அதிகமான சிக்ஸர்களோ ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் மீண்டும் அதை செய்வேன்,” என கெய்ல் தெரிவித்தார்.

கிங்ஸ் XI பஞ்சாப் அணி அடுத்ததாக கிறிஸ் கெய்லின் முன்னாள் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சின்னஸ்வாமி மைதானத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி விளையாடவுள்ளது. • SHARE
  Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!
 • விவரம் காண

  பயிற்சியாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! 10 வருடம் கழித்து உண்மையை உடைத்த கிராண்ட் பிளவர்

  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட்...

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...