நான் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வந்தேனா?.. போக போக நான் யார்னு பாப்பீங்க: ஷிவம் துபே தில்லான பேட்டி! 1

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக நான் அணிக்கு வரவில்லை. இந்திய அணிக்காக விளையாட கிடைத்த கவுரவமாகவே பார்க்கிறேன். வரும் போட்டிகளில் நான் யார் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் ஷிவம் துபே அசத்தலான பேட்டியளித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நடந்த டி–20 தொடருக்கு பின்பு, முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால், அணியில் இடம்பெறவில்லை.

காயத்திற்க்காக ஆப்பரேஷன் செய்துக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, நன்கு குணமடைந்து மீண்டும் பயிற்சியை மேற்கொண்டு, நல்ல உடல் தகுதி பெற்று வருகிறார்.

நான் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வந்தேனா?.. போக போக நான் யார்னு பாப்பீங்க: ஷிவம் துபே தில்லான பேட்டி! 2

இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிராக நடந்து முடிந்த தொடரின் டி–20 போட்டியில் ஷிவம் துபே இந்திய அணியில் இடம்பெற்று, அறிமுகமானார். ஆல் ரவுண்டரான இவருக்கு முதல் போட்டி எதிர்பார்த்த அறிமுகமாக அமையவில்லை. இரண்டாவது போட்டியில், முக்கிய விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.

இத்தொடரில் 10 ரன்கள், 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வருகிற 6ஆம் தேதி துவங்கவிருக்கும் டி–20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இவர் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப வந்திருக்கிறார் என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

நான் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வந்தேனா?.. போக போக நான் யார்னு பாப்பீங்க: ஷிவம் துபே தில்லான பேட்டி! 3

இது குறித்து ஷிவம் துபே கூறுகையில்,“ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஒருபோதும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக விளையாட கிடைத்த கவுரவமாகவே பார்க்கிறேன். என்னால் முடிந்தளவு சிறப்பாக செயல்படுவேன். இந்திய அணி கேப்டன் கோஹ்லி எனக்கு ஆதரவு தந்ததால், முதல் தொடரில் நம்பிக்கையுடன் விளையாடினேன்.

டிரெசிங் ரூமில் பதற்றம், நெருக்கடி இல்லாமல் இருந்தேன். ஆல் ரவுண்டர் என்பதால் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கைகொடுக்க வேண்டும். இதற்காக உடற்தகுதியை சிறப்பாக வைத்திருப்பதுதான் கடினமானது. வெஸ்ட் இண்டீஸ் அணி டி–20 போட்டிகளில் சவாலான அணி. இருப்பினும், தொடரை இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *