இப்போகூட கூப்பிடுங்க.. பயிற்சியாளராக வருவதற்கு தயார்; முன்னாள் கேப்டன் ஓபன் டாக்!
இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு எந்நேரமும் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார் இந்தமுன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் ரவி சாஸ்திரி பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை உள்ளது. இவர் 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவிக்கு வந்த பிறகு 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பயிற்சியாளராக தேர்வாகியுள்ளார்.
ரவி சாஸ்திரி பதவிக் காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வர விரும்புவதாக கருத்தினை தெரிவித்துள்ளது ரசிகர்களை பலவிதமாக சிந்திக்க வைத்துள்ளது.
தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் முகமது அசாருதீன் இருந்து வருகிறார். பயிற்சியாளர் பதவிக்கு வருவது குறித்து கூறியுள்ள முகமது அசாருதீன், “நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் இப்போதுகூட பயிற்சியாளராக வருவதற்கு நான் ரெடி. தற்போது இந்திய அணியில் அதிகமான பயிற்சியாளர்கள் இருப்பதாக நான் உணருகிறேன். பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டிலும் நான் சிறப்பு தகுதி பெற்று உள்ளதால், என்னை அணியில் எடுத்தால் மேலும் ஒரு பேட்டிங் பயிற்சியாளர் தேவையில்லை என நினைக்கிறேன்.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்காததால் பல இளம் வீரர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மைதானத்திலும் குறைந்தபட்சம் ஏழு போட்டிகள் ஆவது நடைபெறும் என எனது கணிப்பு இருக்கிறது. ஐபிஎல் தொடர் நடைபெற்றால் மக்கள் மனதில் இருக்கும் கொரோனா குறித்த பாதிப்பு சற்று தனியா வாய்ப்பு இருக்கிறது.” என்றார்.