2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்..? இயான் பெல் கணிப்பு !! 1

2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்..? இயான் பெல் கணிப்பு

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணி எது என்பது குறித்து முன்னாள் வீரர் இயான் பெல் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுவிட்டது. அடுத்ததாக ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி இல்லாமல் டாப் 7 ல் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்..? இயான் பெல் கணிப்பு !! 2
England players celebrate after defeating Sri Lanka by 10 run in their ICC Twenty20 2016 Cricket World Cup match at the Feroz Shah Kotla Cricket Stadium in New Delhi, India, Saturday, March 26, 2016. (AP Photo /Tsering Topgyal)

இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் இயான் பெல், அடுத்த உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி குறித்து தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இயான் பெல் கூறியதாவது, “2019ம் ஆண்டு உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் நினைக்கின்றனர். இங்கிலாந்து அணியும் கடந்த காலங்களை விட தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனது. அதே வேளையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இதில் குறிப்பாக பாகிஸ்தான் அணி சமீப காலமாக அபாரமாக விளையாடி வருகிறது. கடந்த சாம்பியன்ஸ் டிராபியை வைத்து பார்க்கையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் மற்ற அனைத்து அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்..? இயான் பெல் கணிப்பு !! 3

அதே போல்  உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் ஆஸ்திரேலிய அணியும் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பமனமாக விளங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது சாதரண விசயமல்ல. ஆனால் என்னை பொறுத்தவரையில் இங்கிலாந்து, இந்தியா அல்லது பாகிஸ்தான் இதில் எதாவது ஒரு அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *