சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்! ரசிகர்கள் கவலை 1

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்! ரசிகர்கள் கவலை

 

முன்னாள் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் இயான் பெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தற்போது இவருக்கு 38 வயதாகிறது இங்கிலாந்து அணிக்காக 2004 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 118 டெஸ்ட் போட்டிகளில் 161 ஒருநாள் போட்டிகளில் 8 டி20 போட்டியிலும் ஆடியிருக்கிறார்.Ian Bell

மற்ற நாடுகளைப் போலல்லாது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மட்டும் நன்றாக அணி வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதிக காலம் ஆடவைக்கும் அதுவும் 100 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. ஒரு நாள் போட்டிகளை பொறுத்த மட்டில்  சொற்ப ஆட்டங்களுக்கு மட்டுமே வைத்து இருப்பார்கள். அவ்வப்போது வீரர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

 அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் இயான் பெல். 15 வருடங்களில் 118 டெஸ்ட் போட்டிகள் ஆடியும் , ஒருநாள் போட்டிகளில்,161 போட்டிகள் மட்டுமே ஆடியிருக்கிறார்.தற்போது உள்ளூர் போட்டிகளில் கடந்த நான்கு வருடங்களாக ஆடி வந்த இவர் இவ்வகை அறிவித்திருக்கிறார்.Ian Bell

டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களும் 22 சதங்களும் 46 அரை சதங்களும் அடித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் இவர் தான். கடைசியாக 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தார். தற்போது ஓய்வினை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

 

 

அந்த பதிவில் இங்கிலாந்து அணிக்காக ஆடிய தே எனக்கு பெருமையாக இருக்கிறது. கடந்த 22 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் இங்கிலாந்து அணி நம்பர் ஒன் அணியாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தபோது அந்த அணியின் முக்கிய வீரராக நானிருந்தேன். 5 ஆசஸ் தொடர்களை வெற்றி பெற்றிருக்கிறேன். இந்தியாவிலும் ஒரு தொடரை வெற்றி பெற்றிருக்கிறோம். எனது காலத்தில் நாங்கள் பல சாதனைகள் படைத்து விட்டோம். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு தற்போது நான் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்! இத்துடன் உள்ளூர் போட்டிகளிலும் இனி விளையாட மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் இயான் பெல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *