
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தான் எதிர்பார்க்கும் வீரர்கள் இவர்கள் தான் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் ஷப்பல் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர்களான வில் பொகோஸ்கி மற்றும் கேமரான் க்ரீன் ஆகியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது வரவேற்கத்தக்கது. மேலும் இந்திய அணியில் ப்ரித்விஷாவுக்கு வாய்ப்பு அளித்தது மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
வில் பொகோஸ்கி கேமரான் க்ரீன்

ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டிகளில் அறிமுகமான வில் பொகோஸ்கி முதல் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அனைவரையும் வாயடைக்கச் செய்தார். இவரின் அதிரடியான ஆட்டம் பல கிரிக்கெட் ஜாம்பவான்களில் வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியின் ஓபனர் ஆன வார்னர் இருக்கு இவர் நல்ல ஜோடியாக திகழ்வார் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் 21 வயதான கேமரான் க்ரீன் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர். இவர் ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டிகளில் அருமையாக பந்து வீசியும் அதிரடியாக பேட்டிங் செய்தும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் இவருக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறியதாவது இந்திய அணி பிரித்விஷா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். 18 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமான இவர் தனது அபார திறமையால் அனைவரையும வியப்பில் ஆழ்த்தினார் கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அது அவருக்கு ஒரு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். பின் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற இவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். ஆஸ்திரேலியா மற்றும் இந்தியன் செலக்டர்ஸ்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மிகவும் சந்தோஷமான விஷயமாகும் இவ்வாறு அவர்கள் செய்வதால் அது இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் உற்சாகமாக திகழும் என்றும் அவர் கூறினார்