இறுதிப்போட்டியில் இது நிச்சயம் நடக்காது!! ஐசிசி அதிரடி முடிவு 1

இறுதிப்போட்டியின்போது வானத்தில் விமானங்கள் பறக்காது என ஐசிசி வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியின்போது மைதானத்தின் மேலே “பலுசிஸ்தானை காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்களுடன் கூடிய விமானம் பறந்தது. இதற்க்கு பிசிசிஐ ஐசிசி-இடம் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதன்பிறகு அடுத்த போட்டியில் இதுபோன்ற செயல்கள் நடக்காது என ஐசிசி உறுதியளித்தது.

இறுதிப்போட்டியில் இது நிச்சயம் நடக்காது!! ஐசிசி அதிரடி முடிவு 2

இருப்பினும், இந்தியா – இலங்கை அணிகள் மோதிய லீக் ஆட்டத்தின்போது மைதானத்தின் மேலே விமானங்கள் பறந்தது. அதில் “காஷ்மீர் மீது போர் தொடுக்காதீர்கள்”, “காஷ்மீர் மக்களை சீண்டாதீர்கள்” ஆகிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிசிசிஐ மற்றும் ஐசிசி இரு தரப்பினரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இறுதிப்போட்டியில் இது நிச்சயம் நடக்காது!! ஐசிசி அதிரடி முடிவு 3

இப்புகார்களின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது இறுதி போட்டியின் போது இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மைதானத்தை சுற்றியுள்ள பகுதி “விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி”-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை வரும் ஜூலை 15-ஆம் தேதி அன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஐசிசி நிர்வாக குழு இன்று வெளியிட்டள்ளது.

இறுதி போட்டி

இறுதிப்போட்டியில் இது நிச்சயம் நடக்காது!! ஐசிசி அதிரடி முடிவு 4

முதல் அரை இறுதி போட்டியில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்திடன் இந்தியா அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியுடன் 2வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது.  புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் நாளை மோதவுள்ளன.

இப்போட்டி லண்டனில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *