டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா நீடிப்பு; ஆஸ்திரேலியா 5-வது இடத்திற்கு சறுக்கல்

வங்காள தேசம் – ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. டாக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காள தேசமும், சிட்டகாங்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என ஆஸ்திரேலியா சமன் செய்ததால் 3 புள்ளிகளை இழந்து 97 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு சறுக்கியுள்ளது.

இந்தியா 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. தென்ஆப்பிரிக்கா 110 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.

டாக்கா டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் வங்காள தேசம் 5 புள்ளிகள் கூடுதலாக பெற்று 74 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 75 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

ஐசிசி அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசை (அணிகள் & மதிப்பீடு):

1. இந்தியா – 125
2. தென்னாபிரிக்கா – 110
3. இங்கிலாந்து – 105
4. நியூஸிலாந்து – 97
5. ஆஸ்திரேலியா – 97
6. பாகிஸ்தான் – 93
7. இலங்கை – 90
8. வெஸ்ட் இண்டீஸ் – 75
9. வங்கதேசம் – 74
10. ஜிம்பாப்வே- 0

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.