ஒவ்வொரு நாடுகளில் சிறப்பாக ஆட கூடிய சில வீரர்களுக்கு உலக கோப்பை அணியில் இடம் கொடுக்கவில்லை. அவர்களை தொகுத்து 11 வீரர்கள் கொண்ட ஒரு அணியாக வெளியிட்டுள்ளது ஐசிசி. அதன் பட்டியலை இங்கு காண்போம்.
உலக கோப்பையில் பங்குபெறும் 10 நாடுகளும் தங்களுக்கான உலக கோப்பை அணியை வெளியிட்டுவிட்டன. அதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற முன்னணி நாடுகளில் சிறப்பாக ஆடி வந்த வீரர்கள் சிலர் தங்களது உலகக்கோப்பை அணியில் இடம் பெறவில்லை. இதற்காக ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ரசிகர்களின் கருத்துக்கள் மற்றும் வீரர்களின் சமீபத்திய செயல்பாடுகள் அடிப்படையில் உலக கோப்பை அணியில் இடம்பெறாத சிறந்த 11 வீரர்கள் பட்டியலை தொகுத்து வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
இந்திய அணிக்கு 4வது இடத்தில் சிறப்பாக தனது பங்களிப்பை தொடர்ந்து அளித்து வந்த அம்பத்தி ராயுடு உலக கோப்பை அணியில் இடம் பெறாதது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதைப்போல அதிரடி இளம் வீரர் ரிஷப் பண்ட் அனுபவம் அடிப்படையில் தனது இடத்தை தினேஷ் கார்த்திக் இடம் இழந்துள்ளார்.
இவர்கள் இருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அம்பத்தி ராயுடு க்கு பதிலாக அனுபவம் இல்லாத விஜய் சங்கர் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பில்டிங் ஆகிய மூன்று கோணங்களின் அடிப்படையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இது சமூகவலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதேபோல், ஆஸ்திரேலிய அணியில் சமீபத்திய போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடிய பீட்டர் ஹண்ட்ஸ்க்கோம் உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. இவர் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சதம் மற்றும் 2 அரை சதங்கள் அடித்து அசத்தினார்.

இலங்கை அணியில் நிரோஷன் டிக்வாலா, அகிலா தனஞ்செயா; இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்; பாகிஸ்தான் அணியில் அமீர் மற்றும் ஆசிப் அலி; வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரான் பொல்லார்ட் போன்ற சிறந்த வீரர்களுக்கு அவர்களது நாடுகளின உலகக்கோப்பை அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
ஆனால், இவர்களுக்கு இந்த பட்டியலில் ஐசிசி இடம் கொடுத்துள்ளது.
இதனை தொகுத்து ஐசிசி ஒரு முழு அணியாக வெளியிட்டுள்ளது.
Rishabh Pant?
Jofra Archer?Check out this XI of players who were unlucky to miss out on a @cricketworldcup spot ⬇️ https://t.co/l0e8yhd3lM
— ICC (@ICC) April 25, 2019