சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு செருப்பட் கொடுத்த ஜடேஜா; கொண்டாடும் ரசிகர்கள் !! 1

சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு செருப்பட் கொடுத்த ஜடேஜா; கொண்டாடும் ரசிகர்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஜடேஜாவின் சிறப்பான பீல்டிங்கிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர் குப்தில் 1 (14) ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிகோல்ஸ் 28 (51) ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டெய்லர் மற்றும் வில்லியம்சன் நிலைத்து விளையாடினர். கேப்டன் வில்லியம்சன் 67 (95) ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் டெய்லர் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து ஆடினார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு செருப்பட் கொடுத்த ஜடேஜா; கொண்டாடும் ரசிகர்கள் !! 2


46.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் விட்ட இடத்தில் இருந்து போட்டி இன்று 3 மணிக்கு துவங்கியது.

நேற்றைய ஆட்டத்தை போலவே இன்றும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிதாக ரன்களை வாரி வழங்கவில்லை. நேற்றில் இருந்து தொல்லை கொடுத்து வந்த ராஸ் டெய்லர் 74 ரன்கள் எடுத்திருந்த போது தனது துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட்டாக்கிய ஜடேஜா, அதற்கு அடுத்த பந்திலேயே அசத்தலான கேட்ச் முலம் டாம் லாதமையும் வெளியேற்றி அசத்தினார்.

வீடியோ;

இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஜடேஜாவை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே வேளையில், தேவை இல்லாமல் ஜடேஜாவை வம்புக்கு இழுத்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரையும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *