இங்கிலாந்தில் ஜூன் மாதம் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராப்பி என்னும் தொடர் நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு பரிசு வழங்குவதற்காக மொத்தம் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் வைத்திருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) கூறியுள்ளது. இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் வெற்றி பெரும் அணிக்கு 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்போவதாக ஐசிசி கூறியுள்ளது.
கடைசியாக இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் இதே இங்கிலாந்தில் 2013-ஆம் ஆண்டு நடந்தது.
அந்த தொடருடன் ஒப்பிடும் போது இந்த முறை 500,000 அமெரிக்க டாலர்கள் உயர்த்தி உள்ளார்கள். இந்த தொடர் மூன்று இடங்களில் நடக்க போகிறது – கார்டிப் வேல்ஸ், எட்க்பாஸ்டன் மற்றும் ஓவல்.
இந்த தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்திப்பவர்களுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டாலரும், அரை-இறுதி போட்டியில் தோற்கும் இரு அணிகளுக்கு 450,000 அமெரிக்க டாலரும், இரு பிரிவிலும் 3வது இடத்தில் இருக்கும் அணிக்கு 90,000 அமெரிக்க டாலரும், மீதம் இருக்கும் அணிக்கு 60,000 அமெரிக்க டாலரும் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.