ஐசிசி சூப்பர் லீக் புள்ளி பட்டியல் அறிவிப்பு ! முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி! ஜிம்பாப்வே அயர்லாந்து அணியை விட பின்தங்கிய இந்திய அணி !
சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதன் மூலம் ஐசிசி சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒரு வழியாக இந்த புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்திய அணியின் இந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கவில்லை என்றால் 10-வது இடத்தை தாண்டி சென்றிருக்கும்.
இதற்கு முன்னதாக 30 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி மொத்தம் 40 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள், இரண்டு தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

இங்கிலாந்து அணி 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 3 தோல்வியுடன் 30 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் நிலைமை படுமோசமாக சென்றுவிட்டது. மூன்று போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு தோல்விகளை சந்தித்து 9 புள்ளிகளை மட்டுமே பெற்று 6வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
2023ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான இந்த ஐசிசி சூப்பர் லீக் புள்ளிப்பட்டியல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புள்ளி பட்டியலில் மொத்தம் 13 அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக உலக கோப்பை தொடரில் தகுதி பெரும்.

புள்ளி பட்டியலில் தற்போது இந்திய அணி 6-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 10 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியில் வென்ற அயர்லாந்து அணி 10 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் தற்போதைக்கு இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.