எத்தனை கோடி கொடுத்தாலும் எனக்கு இது தான் முக்கியம்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக் !! 1

எத்தனை கோடி கொடுத்தாலும் எனக்கு இது தான் முக்கியம்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக்

சீனாவில் கிளம்பிய கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல ஆண்டுதோறும் இந்தியாவில் கோலாகலமாக நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி துவங்குவதாக இருந்த 7ஆவது டி-20 கிரிக்கெட் தொடரும் நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது ஐசிசி திட்டமிட்டபடி உலகக்கோப்பை தொடர் நடக்கும் என அறிவித்துள்ளது.

எத்தனை கோடி கொடுத்தாலும் எனக்கு இது தான் முக்கியம்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக் !! 2

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான பாட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 15.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை விட உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவே அதிக ஆர்வமுடன் உள்ளதாக கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

எத்தனை கோடி கொடுத்தாலும் எனக்கு இது தான் முக்கியம்; பேட் கம்மின்ஸ் ஓபன் டாக் !! 3

இது குறித்து கம்மின்ஸ் கூறுகையில், “கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த ஆர்வம் அதிகமாக உள்ளது. கடந்த 2015 இல் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல முன்னேற்றம் அளித்தது. ஆனால் அதன் ஃபைனலில் நான் பங்கேற்கவில்லை. இந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் உலகக்கோப்பை தொடர் தான் மிகப்பெரியது. அதனால் அதில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். அதே ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *