ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கேப்டன் கோஹ்லி மீண்டும் சறுக்கல்; டாப் பொசிசனில் ரவி அஸ்வின்!! ரோஹித், கேஎல் ராகுல் நிலை?? 1

ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோலி இரண்டு இன்னிங்சிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரேமாதிரியாக ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் இன்னிங்சில் 35 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 18 ரன்கள் என தனது சராசரிக்கும் குறைவாகவே அடித்திருக்கிறார்.

துணை கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக துணை கேப்டன் பொறுப்பை கேஎல் ராகுல் ஏற்று விளையாடி வருகிறார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கேப்டன் கோஹ்லி மீண்டும் சறுக்கல்; டாப் பொசிசனில் ரவி அஸ்வின்!! ரோஹித், கேஎல் ராகுல் நிலை?? 2

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், மார்னஸ் லபுச்சானே 915 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து அணி சொதப்பலாக விளையாடினாலும் பேட்டிங்கில் நன்றாக ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 900 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்மித் இருவரும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கின்றனர்.

துணை கேப்டன் ரோகித் சர்மா 6வது இடத்திலும், கேப்டன் விராட்கோலி 7வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் 883 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரர் இவர் மட்டுமே.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கேப்டன் கோஹ்லி மீண்டும் சறுக்கல்; டாப் பொசிசனில் ரவி அஸ்வின்!! ரோஹித், கேஎல் ராகுல் நிலை?? 3

ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் மற்றுமொரு ஆல்ரவுண்டர் ஜடேஜா மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசிய அறிமுக வீரர் போலண்ட், தரவரிசை பட்டியலில் 74வது இடத்தை பெற்றிருக்கிறார். இவர் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை தவிடுபொடியாக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *