கிட்டத்தட்ட நான்கு மாத காலங்கள் விளையாடவில்லை என்றாலும் நம்பர் ஒன் இடத்தை டெஸ்ட் தரவரிசையில் பிடித்திருக்கிறார் முன்னணி வீரர். சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை தவற விட்டிருக்கிறார். ஐசிசி தரவரிசை பட்டியலை பின்வருமாறு காண்போம்.
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் 2ஆவது இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருதையை பெற்ற போதிலும் முதலிடத்திற்கு முன்னேற முடியாமல் ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திலேயே இருக்கிறார் .
காலில் காயம் ஏற்பட்டு அறுவைசிகிச்சை மேற்கொண்ட கேன் வில்லியம்சன் கிட்டத்தட்ட நான்கு மாத காலங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், முந்தைய பெர்ஃபார்மன்ஸ் மற்றும் சராசரி ஆகியவற்றை வைத்து நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். இதோடு ஆறாவது முறையாக நம்பர் ஒன் இடத்தை கேன் வில்லியம்சன் பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு முதல்முறையாக 2015 ஆம் ஆண்டு முதலிடம் வந்தார், கடைசியாக 2021ஆம் ஆண்டு முதல் இடத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மார்னஸ் லபுச்சானே 873 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஜோ ரூட் ஆஸ்திரலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 10 ரன்கள், 18 ரன்கள் முறையே அடுத்து ஆட்டம் இழந்ததால் தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து அசத்திய பென் டக்கட் கிட்டத்தட்ட 26 இடங்கள் முன்னேறி இருபதாவது இடத்திற்கு வந்திருக்கிறார். இரண்டாவது டெஸ்ட்டில் 155 ரன்கள் அடித்து போராடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 இடங்கள் முன்னேறி தற்போது 23 வது இடத்தில் இருக்கிறார்.
பவுலிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்-ஐ பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது நன்றாக செயல்பட்ட டேவிட் வார்னர் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது 26 வது இடத்தில் இருக்கிறார்.