இந்த தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி, அஸ்வின், தோனி ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கான முழு பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்ட ஒரு வீரருக்கு இந்த தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதினை ஐசிசி வழங்க உள்ளது. இதற்கான பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது அந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களுடன் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ் மற்றும் சங்ககாரா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன.
விராட்கோலி இதில் மட்டுமல்லாது இந்த தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருது மற்றும் 20 ஓவர் போட்டி வீரருக்கான விருது என இந்த இரண்டிலும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
இதுமட்டுமல்லாது கோஹ்லியின் பெயர் ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் என்கிற விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் உலக கோப்பையை பெற்றுத்தந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 இரண்டு போட்டிகளில் சிறந்த வீரருக்கான பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே சுமார் 20,000 ரன்களுக்கு மேலும், 70 சதங்களும் விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாது மூன்று விதமான போட்டிகளிலும் 50க்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார். ஆதலால் மூன்றுவித போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருது இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என அனைவருக்கும் பட்டிருக்கும்.
ஐசிசி வெளியிட்டுள்ள முழு பட்டியல் இதோ:
தசாப்தத்தின் சிறந்த வீரருக்கான பட்டியல்: விராட் கோலி (இந்தியா), ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஏபி டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா), மற்றும் குமார் சங்கக்காரா (இலங்கை).
மகளிர் ஒருநாள் வீரர்: மெக் லானிங் (ஆஸ்திரேலியா), எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), மிதாலி ராஜ் (இந்தியா), சுசி பேட்ஸ் (நியூசிலாந்து), ஸ்டஃபானி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்) மற்றும் ஜூலன் கோஸ்வாமி (இந்தியா).
தசாப்தத்தின் சிறந்த மகளிர் வீரர்: எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), மெக் லானிங் (ஆஸ்திரேலியா), சுசி பேட்ஸ் (நியூசிலாந்து), ஸ்டஃபானி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்), மிதாலி ராஜ் (இந்தியா), சாரா டெய்லர் (இங்கிலாந்து).
தசாப்தத்தின் ஆண்கள் ஒருநாள் வீரர்: விராட் கோஹ்லி (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஏபி டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா (இந்தியா), எம்.எஸ்.தோனி (இந்தியா), மற்றும் குமார சங்கக்காரா (இலங்கை).
தசாப்தத்தின் ஆண்கள் டெஸ்ட் வீரர்: விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), ரங்கனா ஹெராத் (இலங்கை), மற்றும் யாசிர் ஷா (பாகிஸ்தான்).
ஆண்கள் டி 20 வீரர்: ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), விராட் கோலி (இந்தியா), இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), லசித் மலிங்கா (இலங்கை), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்), மற்றும் ரோஹித் சர்மா ( இந்தியா).
ஐ.சி.சி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது: விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), பிரெண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), மிஸ்பா-உல்-ஹக் (பாகிஸ்தான்), எம்.எஸ். தோனி (இந்தியா), அன்யா ஷ்ருப்சோல் (இங்கிலாந்து), கேத்ரின் ப்ரண்ட் (இங்கிலாந்து), மகேலா ஜெயவர்தனே (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து).