ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் அறிவிப்பு ! மோசமான ஃபார்ம், மேலும் முதலிடத்தை தக்க வைத்த விராட் கோலி ! 1

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் அறிவிப்பு ! மோசமான ஃபார்ம், மேலும் முதலிடத்தை தக்க வைத்த விராட் கோலி !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் கையோடு ஐசிசி ஒருநாள் தொடருக்கான தரவரிசை பட்டியலை அறிவித்து இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட்கோலி இரண்டு அரைசதங்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர் 870 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ரோகித் சர்மா 842 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மாவை விட ஐந்து புள்ளிகள் குறைவாக இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3வது இடத்தில் இருக்கிறார். அவனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் அறிவிப்பு ! மோசமான ஃபார்ம், மேலும் முதலிடத்தை தக்க வைத்த விராட் கோலி ! 2

அணிகளின் தர வரிசைப்பட்டியல் பொருத்தவரை இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அணி அந்த அணியை விட 6 புள்ளிகள் குறைவாக 117 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் அறிவிப்பு ! மோசமான ஃபார்ம், மேலும் முதலிடத்தை தக்க வைத்த விராட் கோலி ! 3

பந்துவீச்சாளர்களை வரிசைப்பட்டியல் பொருத்தவரை நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா அவரைவிட 22 புள்ளிகள் பின்தங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்தியாவின் சார்பில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் ஒரே வீரர் இவர்தான். ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 373 புள்ளிகளுடன் முதலிடத்திலும் முகமது நபி, கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்திருக்கின்றனர். இந்தியாவின் சார்பில் ரவீந்தர் ஜடேஜா 253 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *